Tuesday, December 31, 2013

new year 2014

2014
நீங்கள் எடுக்கும் எல்லா 
முயற்சிகளுக்கும் இந்த 
ஆங்கிலப்புத்தாண்டு, வரப்போகும் 
தமிழர் பொன்னாள் தைப்பொங்கல் 
திருநாளுக்கு கட்டியம் கூறும் 
நல்வரவாக அமைந்து ,உங்களுக்கு உத்வேகத்தையும் வெற்றியையும் 
தந்து,உங்கள் வாழ்வு வளமாகவும், 
சிறப்பாகவும் அமைய, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் மற்றும் 
சுற்றத்தார் 
அனைவருக்கும் எமது மனங்கனிந்த இனிய  நல் வாழ்த்துக்கள்!

ஞானகுமாரன்.

Friday, November 1, 2013


உங்கள் இல்லங்களில் தீப ஒளிவெள்ளம் பரவி, இருளை அகற்றி , உற்சாகத்தையும் சந்தோசத்தையும் அளிக்கட்டும்!

அன்பர்  அனைவருக்கும் எமது மனப்பூர்வமான தீபாவளித்  திருநாள் நல்வாழ்த்துக்கள்!

Saturday, October 12, 2013

அன்பு வாசகர்கள் , கமோடிட்டி வணிகர்கள்  
அனைவருக்கும் எமது உளங்கனிந்த விஜயதசமி , 
சரஸ்வதி பூஜை திருநாள் நல்வாழ்த்துக்கள்!இந்தப் புனித நன்னாளில் , இயற்கை மூலிகை வழி நின்று தேக ஆரோக்கியம் பெறவும் தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் வாழ்வில் எல்லாவகை செல்வங்களும் பெற்று , கமோடிட்டி வணிகத்தில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற்று நல வாழ்வு வாழ , அன்னை விஜயலட்சுமியை , அன்னை சரஸ்வதியைப் போற்றி , முப்பெரும் தேவியர் பாதம் பணிந்து பிரார்த்திக்கிறோம்!

அன்புடன்,

ஞானகுமாரன்.

Friday, October 4, 2013

இன்ஸ்டன்ட் வணிகம் - இன்ஸ்டன்ட் இலாபம்

வணக்கம் அன்பு கமோடிட்டி வணிக நண்பர்களே! கால தாமதத்திற்கு வருந்துகிறேன்.இன்றைய பதிவில் எப்படி இன்ஸ்டன்ட் இலாபம் சம்பாதிப்பது எனப் பார்க்கலாம். தயவுசெய்து வணிகத்தில் அனுபவம்  கொண்டவர்கள் மட்டுமே இதை, முயன்று பாருங்கள். மற்றவர்கள் எமது ஆரம்ப கட்டுரைகளை வாசித்துவிட்டு , நிறைய  பயிற்சிகளுக்குப்பின் வணிகத்தில் இறங்கவும்.

இனி இன்ஸ்டன்ட் வணிகம் பற்றி பார்ப்போம். இது ஓன்றுமில்லை, நாள் முழுவதும் கணினி முன் அமர்ந்து வணிகத்தின் போக்கை உணர்ந்து கொண்டு , வணிகம் செய்யாமல் , சற்றே நேரத்தில் , உடனடி இலாபம் சம்பாதிக்கும் கலை இது.

மிகுந்த முயற்சிகளுக்குப்பின் , அடைந்த பலனை , யாரும் வெளியே சொல்லாமல்  தாம் மட்டும் அனுபவிக்கும் சித்த மூலிகை இரசியம் போன்ற இந்த விஷயத்தை,  பொதுவில் வைப்பது எமக்கு மகிழ்ச்சியே!

யாம் பெற்ற வெற்றி , யாவரும் பெறட்டும்! 

இனி வணிகத்தை, சந்தையை கவனிப்போம். மதியம் 3 மணி அல்லது, இரவு 9 மணி எனககொள்வோம், அதாவது ஐரோப்பிய சந்தைகளும்,அமெரிக்க சந்தைகளும்  ஆரம்பித்த சற்று நேரம் கழித்து , சந்தையின் போக்கினை வழக்கமான பொருட்களின் இருப்பு,விலை,ரூபாய் மதிப்பு மற்றும் பிற காரணிகள் கொண்டு மனதில் இருத்திக்கொண்டு , வணிகம் செய்ய விரும்பும் பொருளின் சந்தைபோக்கினை கவனியுங்கள்.

பொருளின் விலை அன்றைய உச்சத்தையோ அல்லது கீழ்நிலையையோ தொடும் அருகில் இருந்தால் , விற்கவோ அல்லது வாங்கவோ செய்யுங்கள். அதாவது , உச்சத்தின் அருகே விற்றுவிடுங்கள் , கீழ் நிலையின் அருகே வாங்கி விடுங்கள் , சற்று நேரத்தில் ,வெகு விரைவில் சிறிய மாற்றத்தில் , கிடைத்த இலாபத்தில் விற்று விடுங்கள் , நிச்சயம் இலாபம் கிடைக்கும், லாட்களின் எண்ணிக்கை கூடும்போது கணிசமான் இலாபம் நிச்சயம்!  

மீண்டும் ஒரு முறை எச்சரிக்கிறேன், மிக  அனுபவம் கொண்டவர்கள் மட்டும் முயற்சி செய்ய வேண்டிய வணிகம் இது, ஸ்டாப் லாஸ் அவசியம்.ரிஸ்க் அதிகம் இருப்பதால், புதியவர்கள் , ஒரே நாளில் , நிறைய சம்பாதிக்க எண்ணி ,  ஒரு மாதத்தில் சம்பாதிப்பதை ஒரு நாளில் சம்பாதிக்க நினைத்து , முயன்று  இருப்பதை இழக்காதீர்கள்.

இந்த பதிவு அனுபவம் கொண்ட , தேவையான அளவு முதலீடு கொண்ட , வணிகர்களுக்கானது. அவர்களுக்குத்தான் ஏற்கெனவே , தெரியுமே, நீங்கள் என்ன புதிதாக சொல்ல வந்து விட்டீர்கள் என நீங்கள் கேட்கலாம், 

உண்மை என்னவெனில், என்ன தான் நன்றாகப்படித்து விட்டு பரிட்சை எழுதப்போனாலும், சில சமயம் படித்தது மறந்து போகும், அதுவும் மிக நன்றாக படித்தது தெரிந்தது சமயத்தில் ஞாபகத்தில் வராது சிரமப்படுத்தும், அத்தகைய நிலை ஏற்பட விடாமல் அனுபவ வணிகர்களுக்கு அவர்கள் அறிந்த விஷயத்தை மீண்டும் மீண்டும் அவர்கள் படிக்க கேட்க நேரும் பொது , நிச்சயம் மறதி  ஏற்படாமல் என்றும் மனதில் இருக்கும் , மேலும் இது உங்களுக்கான , புதியவர்களுக்கான பதிவும் கூட , உங்களை ஊக்கப்படுத்தி , நிறைந்த அனுபவத்திற்கு பிறகு ,எத்தகைய வணிகப்போக்கிலும் வெல்லலாம், குறைந்த நேரத்தில் , இலாபம் ஈட்டலாம் எனும் நற்ச்செய்தியை உங்களுக்கு சொல்லும் பதிவும் கூட இது!

நிறைந்த அனுபவத்தின் மூலம் வணிகத்தில் வெல்ல எமது நல்வாழ்த்துக்கள்!
Monday, September 9, 2013

விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்!


 வாசக சகோதர சகோதரியர் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்,நண்பர்கள் அனைவருக்கும், விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

 உங்கள் உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியம் சார்ந்த அனைத்து பிரச்னைகளும் விநாயகர் திருவருளால் முற்றிலும் நீங்கி, நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் உற்றத்தார் மற்றும் சுற்றத்தாருடன்  நீண்ட ஆரோக்கியத்துடன் நீடித்த நல்வாழ்வு வாழ, ஞான விநாயகன் திருவடி பணிந்து பிரார்த்திக்கிறோம்!

வாழ்க நலமுடன்!

ஞானா.

Thursday, August 29, 2013

அருமை நண்பர்களே!

அவரவர் வாழ்வியல் காரணிகளால், கமோடிடி வணிகம் , மூலம் பொருளீட்டி, குடும்ப வாழ்வு மேம்பட அல்லது சம்பளப்பற்றாகுறை காரணமாக பகுதி நேரம் கமோடிடி வணிகம் செய்துகொண்டிருக்கும், உங்களுக்கு, நீங்கள் கமோடிடி வணிகத்தில் வெற்றி பெற்று பொருளாதார தன்னிறைவு அடைய எமது உளப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்!

நீங்கள் முதலீடு செய்துள்ள பணம் , உங்களுக்கு மிக மிகத்தேவையான ஒன்று, இதர வருமானம் கருதி , இங்கே அத்தொகையை முதலீடு செய்திருக்கிறீர்கள், மேலும் , நீங்கள் யாவரும் செய்வது மற்றும் செய்ய விரும்புவது , தின வணிகம் தான், பெருந்தொகையை இன்வெஸ்ட் செய்துவிட்டு, மாதக்கணக்கில் காத்திருந்து, அதில் இலாபம் சம்பாதிக்க மிகப் பணம் படைத்தோர் அதிக அளவில் இருக்கின்றனர்.

ஆயினும் சிறிய தொகையை வணிகத்தில் முதலீடு செய்துவிட்டு,அதன் மூலம் சிறிய அளவில் பொருளீட்டி, வாழ்வியல் தேவைகளை நிறைவேற்ற எண்ணும் அனபர்கள் மூலதனத்தில் அதிக அக்கறை கொள்ளவேண்டும் அல்லவா?

ஆயினும், எந்த நிலை வணிகம் செய்வோர் ஆயினும், அங்கே முகம் தெரியாது, உறவு தெரியாது, நாம் வணிகத்தில் ஈடுபடும்போது, நாம் ஒரு பொருளை வாங்கும் போது அது யாரிடம் இருந்து வாங்கினோம் எனத்தெரியுமா என்ன? மேலும், நாம் அதிக இலாபம் அந்த வணிகத்தில் அடைந்ததும், அவரைக்கூப்பிட்டு , உங்களிடம் வாங்கி நான் நல்ல இலாபம் பெற்றேன் எனக் கூறமுடியுமா என்ன? இல்லை, நஷ்டத்தில் நான் உங்களிடம் வாங்கித் தான் என் முதல் எல்லாம் போயிற்று, எனவே எனக்கு நஷ்ட ஈடு தாருங்கள் எனக் கூறமுடியுமா? வாய்ப்பு இருக்கிறதா?

இதெல்லாம், நீங்கள் அறிந்ததுதான், ஏன் இங்கே, பகிர்கிறோம் என்றால், கமோடிடி வணிகத்தில் முடிவு எடுத்து வணிகத்தில் இறங்குவதில் நாம் தான் இராஜா மந்திரி எல்லாம், ஏன் சமயத்தில் ஏவலாளும் நாம்தான். அதனால், வெற்றி என்பது எப்படி நமது இலக்கோ,இலட்சியமோ அப்படி த்தான் தோல்வி என்பதும் நம்மைத் தொடர்ந்து வரும் ஒரு விசயம் தான். கொஞ்சம் பிசகினால், நம்மை அடையத் தோல்வி காத்திருக்கிறது.

நாம் விலகிச்செல்ல விரும்பும் ஒன்று, நாம் அனுபவிக்க வேண்டாத ஒன்று என நாம் மனதில் நினைக்கும் ஒன்று நம்மை அடைய நாமே, இடம் கொடுத்து விடக்கூடாது!

வெற்றி என்பது ந்மது செயலில் இருக்கிறது! அதில் நமது ஈடுபாட்டில் இருக்கிறது! அர்ப்பணிப்புடன் கூடிய விழிப்புணர்வில் இருக்கிறது!

தவறான செயல்கள் என்றும் நம்மைக் கடைத்தேற்றாது, அதில் நாம் நிச்சயம் வெல்லவும் முடியாது என எல்லா மதங்களின் போதனைகளும் கூறுகின்றன. 

அந்த போதனை கமோடிடி வணிகத்திற்கும் பொருந்தும்.இங்கே, தவறான செயல் என்பது என்ன, சந்தைப்போக்கை கவனியாமல் அல்லது அலட்சியப்போக்கில், நான் கணிப்பது நிச்சயம் நடக்கும் என்ற அதீதத் தன்னம்பிக்கையில் வணிகத்தை அணுகுவது,சந்தையில் பொருளின் தற்போதைய நிலை பற்றி அறியாமல், வணிகத்தில் ஈடுபடுவது,மேலும் ஸ்டாப் லாஸ் இல்லாத வணிகம் , எப்படி இலாபத்தில் முடியும் என யோசித்தீர்களா?

யோசித்து செயல்பட்டு , கமோடிடி வணிகத்தில் வெற்றியடையுங்கள்! 
ஆரோக்கியமான நல் எண்ணங்களால் உங்கள் வாழ்வை வளமாக்குங்கள்! 

மீண்டும் சந்திப்போம்!

தங்களின் மேலான கருத்துக்களை, அன்புடன் வரவேற்கிறோம்!

ஞானக்குமாரன்.


Tuesday, August 27, 2013

கமோடிடியில் வெற்றிகரமாக செயல்பட...

நிறைய பயிற்சிகள் எடுத்துக்கொண்டு , ஃபண்டமெண்டல் , டெக்னிகல் அனாலிஸிஸ் பற்றி தெரிந்துகொண்டோ அல்லது புரிந்துகொண்டோ, வணிகத்தில் இறங்கியாகி விட்டது. 

இந்திய கமோடிடி மார்க்கெட் காலை 10 முதல் இரவு 11.30 அல்லது 11.55 வரை இயங்குவது நாமறிவோம். நாம் வணிகத்தில் இறங்கும் நேரம் ஒன்று வணிகம் ஆரம்ப நேரம் அல்லது நமக்கு வசதியான நேரம், நாம் இடைப்பட்ட வணிக நேரத்தில் , வணிகத்தை ஆரம்பிக்க எண்ணும் போது, என்ன செய்வோம்?

நாம் வணிகம் செய்ய விரும்பும் பொருளின் முதல் நாள் முடிவு விலை, இன்றைய ஆரம்ப விலை, இன்றைய உச்சபட்ச விலை, இன்றைய கீழ்நிலை விலை, இவற்றைப்பார்ப்போமா , இல்லையா? 

சரி. வேறு என்ன பார்ப்போம்?

இன்றைய யு எஸ் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எப்படி இருக்கிறது , எனப்பார்ப்போம் அல்லவா? மேலும், நாம் வணிகம் செய்ய தேர்வு செய்த பொருளுக்கு, உலகலாவிய சந்தையில் அதன் தேவைப்பாடு என்ன, அதன் மொத்த இருப்பு, இப்போது அதன் ஆர்டர் தேவை அளவு என்ன? மேலும் இன்றைக்கு என்ன என்ன யு எஸ் வாராந்திர பொருளாதார அறிக்கைகள் வர இருக்கின்றன, என பார்ப்போமா, இல்லையா?

சரி, இவற்றை எல்லாம், நம்முடைய அளவில் நாம் அவதானித்துவிட்டோம், பிறகு என்ன ? வணிகத்தில் இறங்க வேண்டியது தானே? என்ன யோசனை ?

எல்லாம் ஓரளவு நாம் யூகித்தாலும், இடைநிலை அதாவது , நாம் இப்போது வணிகத்தில் இறங்க எண்ணும் நேரத்தில் , அந்த பொருளின் வணிக நிலையை கவனிக்கும்போது, ஒரு சிறிய யோசனை வருகிறதே, நம்முடைய முடிவு அப்பொருளை வாங்குவதா அல்லது விற்பதா எதை செய்வது என்று?

இந்த ஒரு விசயத்தைத்தான் , நாம் இப்போது பார்க்கப்போகிறோம், அதற்காகத்தான் இந்த சற்றே நீளமான ஒரு முன்னோட்டம்.

சரி , எப்படி வணிக இடைநேரத்தில் வணிகத்தை ஆரம்பிப்பது?

நம்மில் நிறைய பேருக்கு இப்போது ஆற்றில் குளிக்கும் வாய்ப்பு இல்லாவிடினும், பள்ளிபருவத்தில் அல்லது கல்லூரிப்பருவத்தில் இருந்திருக்கும், அந்த முதல் குளியல் அல்லது நீச்சல் அனுபவத்தை சற்றே எண்ணிப்பாருங்கள், யாராவது ஒரு நண்பர் நிச்சயம் அவருக்கு நீச்சல் தெரிந்திருக்கும் [ :) ], அவர்தான் நமக்கு தைரியம் சொல்லி, நமக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பார்,அவருக்குத்தெரிந்த அல்லது அவர் அறிந்த நீச்சல் தொடர்பான சில விசயங்களை உங்களுக்கு சொல்லிக்கொடுத்திருப்பார், அதில், அவர் சொல்லிக்கொடுத்ததில் தலையாயது என்ன என்று இப்போது யோசிக்க முடிகிறதா? யோசியுங்கள், கொஞ்ச நேரம்!

என்ன ஞாபகம் வரவில்லையா? எதிர்நீச்சல் பற்றி உங்கள் நீச்சல் பயிற்சிக்காலங்களில் நண்பர் என்ன சொன்னார்? அல்லது சொல்லியிருப்பார்?
ஆரம்ப காலம் அல்லது எப்போதும், எதிர்நீச்சல் மிக மிக கவனமான அல்லது ஆபத்துக்காலங்களில் மட்டும் செய்ய வேண்டிய ஒன்று என ச்சொன்னாரா, இல்லையா?  இப்போது ஞாபகம் வந்துவிட்டதா? நல்லது, அதுதான் இங்கே நமக்கும் அவசியம் தேவைப்படும், என்றும் மனதில் பசுமையாக பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டிய ஒன்று!

ஏன் என்கிறீர்களா? எல்லாம் நமது கமோடிடி வணிகம் செவ்வனே செய்யத்தான்!

எப்படி ஆற்றில் நீர் வரத்திற்கு எதிராக நீந்தக்கூடாதோ, அப்படிதான் கமோடிடி மார்க்கெட் போக்கிற்கு எதிராக அப்போது செயல்படக்கூடாது!

நீங்கள் பல்வேறு தகவல்களை திரட்டிக்கொண்டு, ஒரு முடிவு எடுத்து வணிகம் செய்ய வரும்போது, இங்கே மார்க்கெட் கூலாக, உங்கள் எண்ணத்திற்கு நேர்மாறாக சென்றுகொண்டிருக்கும், ஏன் எப்படி என யோசிக்காமல் ,உங்கள் முடிவுப்படி எதிர்நீச்சல் போட்டு கண் முன்னே கிடைக்கும் கமோடிடி வணிக இலாப வாய்ப்பினை இழந்து நஷ்டமடைவீர்களா? அல்லது மார்க்கெட் போக்கில் சென்று இலாபம் அடைவீர்களா?

முடிவு உங்கள் கையில்! 

சிந்தியுங்கள்! செயல்படுங்கள்! வெல்லுங்கள்!!Thursday, July 25, 2013

கமோடிடி வணிகம் வசப்பட...
எத்தனை முறை நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டு வணிகத்தில் ஈடுபட்டாலும் , தோல்வி என்பது தவிர்க்கமுடியாதது ஆகிவிட்டது, எப்படி முயன்றாலும், வெற்றி என்பது இங்கே மாயையாக , கானல் நீராகவே ஆகிவிட்டது, என வாடும் அன்பு வணிகர்களே!

உங்களுக்காக,தோல்வியின் வேகத்தைத்தவிர்க்க, வெற்றிக்காற்றை சுவாசிக்க  ஒரே ஒரு இலகுவான, வழி! முயன்று பாருங்கள்!

நீங்கள் தேர்ந்தெடுக்கும் வணிக நேரம், வணிகத்தில் மாற்றம் அதிகம் நிகழ வாய்ப்பில்லாத, சந்தைப்புள்ளி விபரங்கள் வராத நாளாக இருக்கட்டும்!பொருட்களின் வால்யூம் சீராக இருக்கும் போது , அப்போதைய அதன் உச்ச்த்தையோ அல்லது கீழ்நிலையையோ அடையுன் முன், நீங்களாக அதன் அதிகத்தில் ஒரு உத்தேச அதிக விலையையோ அல்லது உத்தேச கீழ் நிலை விலையையோ ஆர்டர் செய்துவிட்டு, காத்திருங்கள்! நீங்கள் உத்தேசமாக குறிப்பிட்ட விலையில் உங்கள் ஆர்டர் எக்ஸிகியூட் ஆகிவிட்டால்,நீங்கள் எண்ணும் நிலைக்கு அருகாமையில் விலை வரும் போது , மார்க்கெட் ஆர்டர் மூலம் வணிகத்தை நிறைவு செய்யுங்கள்! 

                                                     

வெற்றியை வசப்படுத்துங்கள்!


எச்சரிக்கை, மிக மிக அதிக கவனமாக , வணிகத்தை நிறைவு செய்யுங்கள்!


எதிர்பார்த்த விலை வந்தவுடன் வணிகத்தை நிறைவு செய்யாமல், இன்னும் கொஞ்சம் பார்ப்போம் என எண்ணினால், வணிகம் நிச்சயம் தோல்வியில் முடிய வாய்ப்புகள் அதிகம்!

வாழ்த்துக்கள்! 
அமைதியான வெற்றிகளால்,தோல்விகளுக்கு விடை கொடுங்கள்!
மீண்டும் சந்திப்போம்!

ஞானக்குமாரன்.

Wednesday, June 19, 2013

கமோடிடி வணிகத்தில் பொருட்கள் தேர்ந்தெடுத்தல்!

கமோடிடி வணிகத்தில் பொருட்கள் தேர்ந்தெடுத்தல்!

கமோடிடி வணிகத்தில் நாம் அடுத்து பார்க்க இருப்பது, வணிகப்பொருட்களைத்தேர்ந்தெடுப்பது. வணிகத்தின் வெற்றி நம் தேர்ந்தெடுத்தலில், இருக்கிறது.

எப்படி?

நாம் ஏற்கெனவே பார்த்தோம், சில பொருட்களின் விலை , அவற்றின் வாராந்திர இருப்பு , விற்பனை மற்றும் யு எஸ் டாலரின் மதிப்பில் வேறுபடும் என்று.

அத்தகைய நாட்களில், அவற்றை சிறு வணிகர்கள் அவசியம் தவிர்க்க வேண்டும், பின் எப்படி இலாபம் பார்ப்பது என்கிறீர்களா?, அவற்றின் எதிர் திசையில் உள்ள பொருட்களை அன்றைய நாள் வணிகம் செய்து , நிச்சய இலாபம் பெற்லாம்.

உதாரணத்திற்கு , க்ரூட் ஆயில் விலை, சில சர்வதேச காரணிகளால் இறங்குகிறது என்றால் அன்றைக்கு , கண்டிப்பாக, தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை, சிறு அளவில் வாங்கி , விற்பனையை இலாபமாக முடிக்கலாம், எந்த விலையில் அவற்றை வாங்கலாம் என்றால், அவற்றின் அன்றைய தின வணிகக்கீழ் நிலையிலோ, அல்லது அதன் சற்று மேல் விலையிலோ வாங்கலாம், நிச்சயம் , இலாபத்துடன் , அந்த வணிகத்தினை நிறைவு செய்யலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, மார்க்கெட் போக்கை கவனமாக ,ஆராய்ந்து , பின்னரே, பொசிசன் எடுக்கவும்.

வணிகத்தில் நீங்களும் , வென்றிட , எமது நல் வாழ்த்துக்கள்!


Thursday, May 30, 2013

வணிகத்தை வெற்றிகரமாக முடிப்பது எப்படி ?

இலாபத்தை பதிவு செய்யுங்கள்!   நாம் இதுவரை பார்த்ததன் அடிப்படையில் , க்ருட் ஆயிலோ அல்லது காப்பரோ  [ Crude Oil or Copper ] ஒரு பொசிசன் [ ONE LOT ] எடுத்து விட்டோம் என்று வைத்துக்கொள்வோம் ! அதில் இலாபத்தை பதிவு செய்வது எப்படி எனப்பார்ப்போம்.

அன்றைய வணிகத்தில் , அந்த பொருளின் எந்த நிலையில் நாம் வணிகத்தை, துவக்கி இருக்கிறோம் எனப்பார்ப்போம்.

பொருளின் நிலை , அன்றைய வணிகத்தின் உச்ச நிலைக்கு அருகில், அதாவது 1 பாயிண்ட் [ 1000 ருபாய் ] இருந்தால், இரு முறையோ  அல்லது    3 முறையோ , அந்த நிலையை தொட முயற்சித்திருந்தால்,  நிச்சயம் அந்த பொருளின் உச்ச நிலை , சற்றேறக்குறைய, 1 பாயிண்ட் முதல் 2 பாயிண்ட் வரை மாறலாம் , ஆயினும் அதற்கு முன் , 2 பாயிண்ட்கள் வரை நிச்சயம் இறங்கலாம், எனவே , உங்கள் வணிகம் பொருளின் உயர்வின் அருகே , ஒரு 0.9 பாயிண்ட் கீழே இருந்தால் , விலை அந்த பொருளின் உச்ச விலையை தொடும் போதோ , அல்லது, சற்று மேலே ஒரு 0.2 பாயிண்ட் போட்டோ  , அந்த வணிகத்தை , வெற்றி கரமாக இலாபத்துடன் நிறைவு செய்து விடுங்கள். 

இல்லை , மேலும் விலை உயரும் , நிச்சயம் 2 பாயிண்ட் மேலே செல்லும் என உறுதியாக சார்ட்கள் மற்றும் சர்வதேச மார்கெட் விலை நிலவர அடிப்படையில் ,எண்ணும் தன்னம்பிக்கை திலகங்களுக்கு ஒரு வார்த்தை, நீங்கள் எண்ணுவது உண்மையாக நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம், 

ஆயினும் அப்படி நடக்க , விலை 2 பாயிண்ட் வரை நிச்சயம் கீழே இறங்கும் , அப்போது ஸ்டாப் லாஸ் 3 பாயிண்ட் வரை வைக்க வேண்டியது  இருக்கும், அந்த இடைப்பட்ட நேரத்தில் , வேறு ஒரு மார்க்கெட் காரணியால் , விலை அன்றைய கீழ் நிலையை நோக்கி செல்ல ஆரம்பித்தால், உங்களுடைய முடிவு , உங்களை வருத்தும் , 

எனவே , இலாபத்தை பதிவு செய்யுங்கள்!

பிறகு , கவனமாக மார்க்கெட் போக்கை அறியுங்கள்!


Friday, May 24, 2013

வணிகம் செய்ய உகந்த நேரம்
வணிகம் செய்ய உகந்த நேரம்  எது?, இது நிச்சயமாக மில்லியன் டாலர் கேள்வி!கமோடிட்டி வணிகத்தில், நேரம் தேர்ந்தெடுத்தல் மிக முக்கியம், சந்தை சில காரணிகளால், மாற்றத்தை சந்திக்க தயாராகிக்கொண்டிருக்கும் நேரத்தில், நாம் , அதைக்கருத்தில் கொள்ளாமல், நம்முடைய வேறு சில யூகங்களின் அடிப்படையில், ஒரு பொருளை வாங்கவோ விற்கவோ செய்தால், நிச்சயம் , நம் முடிவு நமக்கு மிகப்பெரிய நட்டத்தைத் தரும் என்பதில் அணு அளவும் சந்தேகமில்லை, ஸ்டாப் லாஸ் போடக்கூட நேரம் கிடைக்காமல், நாம் செய்த வணிகம் நம்மை மிகப்பெரிய 

ந ட்டத்துக்கு ஆளாக்கி விட்டு விடும்.


எனவே, மிக மிக கவனம் தேவை, பல முறை யோசித்து விட்டு , சற்று மார்க்கெட் போக்கை கவனித்து விட்டு, சந்தையை பாதிக்கும் காரணிகளின் அறிக்கை ஏதாவது தற்சமயம் வர இருக்கிறதா , என நிறைய தகவல்கள் சேகரித்து விட்டு , மார்க்கெட் போக்கில் சென்று , வணிகத்தில் வென்று வர , கம்மோடிடி வணிகம் உங்களை வாழ்த்துகிறது!கவனத்தில் கொள்ள வேண்டிய நாட்கள்:


க்ரூட் ஆயில்  -  ஒவ்வொரு Wednesday தோறும் அமெரிக்க ஆயில் இருப்பு நிலவரம் நம்முடைய நேரம் இரவு 8 மணிக்கு வெளியாகும். - க்ரூட் ஆயில் போக்கைப் பொறுத்து, மிகப்பெரிய விலை வித்தியாசத்தில் உடனடி விலை மாற்றம் நிகழும், அப்போது நாம் அந்த வணிகத்தில் , எதிர்மறை போக்கில் இருந்தால் , நிச்சயம் நட்டத்தை தவிர்க்க இயலாது.அது போன்ற சமயங்களில், பொதுவாக, க்ரூட் ஆயில் வணிகத்தில் 
ஈடுபடாமல் இருப்பது மிகச்ச்சிறப்பு, அல்லது மிகக்குறைந்த ஸ்டாப் லாஸ் நிச்சயம் இருக்க வேண்டும்.


மிகக்கடுமையான சந்தை மாற்றத்தில் , அமெரிக்க க்ரூட் ஆயில் அறிக்கைக்குப்பின், க்ரூட் ஆயில் விலை கண்ணிமைக்கும் நேரத்தில் , 

45 - 60 [ 4500 முதல் 6000 ருபாய் வரை ]  பாயிண்ட்கள் மாற்றமடையும்.


எச்சரிக்கை தேவை.இது போன்ற , நுண்ணிய தகவல்களை யாரும் வெளிப்படுத்த மாட்டார்கள், பொது நலம் கருதி, இங்கே வணிக இரகசியங்கள் வெளியிடப்படுகின்றன.இணைந்திருங்கள், பயன்பெறுங்கள்! வணிகத்தில் வெல்லுங்கள்!Saturday, May 11, 2013

கம்மோடிடி வணிகம் - கவனிக்க வேண்டியவை!
 ஸ்டாப் லாஸ்!
                                                                               


இதுவரை நாம் , வணிகத்தின் அடிப்படை மற்றும் பொருட்களின் நிலை அவற்றின் விலை மாறுதல்கள் பற்றி அறிந்தோம்!

இனி, வணிகத்தில் கடைபிடிக்க வேண்டிய உத்திகளைப்  பற்றி பார்ப்போம்.

ஒரு விஷயம் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும், நாம் செய்யப்போவது day trading எனப்படும் தின வணிகம் தான். இதில் நாம் ஒரு பொருளை ஒரு விலைக்கு வாங்கி விட்டு, கருதிய இலாபம் அதில் அடைந்ததும் விற்று விடுவது, ஒரு வகை எல்லோர் மன விருப்பமும் அது  தான்  என்பதில்  ஐயமொன்றுமில்லை, ஆயினும் வேறு சில நாம் 
அறியாக் காரணங்களால், பொருளின் விலை , வாங்கிய விலையை விட, குறைய ஆரம்பித்தால் , என்ன செய்ய முடியும்?, விலை மீண்டும் ஏறும் என எண்ணி இருந்து விட முடியுமா? நம் முதலீடு விரைவில் கரையத்தொடங்கும், என்ன செய்வது?

அப்போது தான் , stoploss என்னும் செயலை நாம் செய்யத்தவறியதன் விளைவுதான் , நம் நட்டம் அதிகரிக்கக் காரணம் என நாம் உணர்ந்து இருப்போம்.

ஸ்டாப் லாஸ் என்றால் என்ன ?

நாம் ஒரு வணிகம் செய்யும் போது , இலாபத்தை கருத்தில்கொண்டு அந்த வணிகத்தின் முடிவை நிர்ணயம் செய்வோம், ஆயினும் பொருளைப்பற்றிய செய்திகளின் அடிப்படையில் , சர்வதேச விலை நிலவர மற்றும் கரன்சி மதிப்பைக் கொண்டு எத்தனை உறுதியாக , நாம் இருந்தாலும், பொருளின் விலை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது, என்ற கருத்தில் , பொருள் நிச்சயம் நாம் குறிப்பிட்ட விலையை எட்டும் ஆயினும்,சந்தை ஏற்ற இறக்கத்தினால் , பொருளின் விலை சற்று கீழே சென்றுவிட்டு பின் மேலேறும் , அந்த கீழே செல்லும் லெவல் தான் நாம் கணித்த ஸ்டாப் லாஸ் லெவல். ஒரு வேலை அந்த நிலையில் விலை மீண்டும் ஏறாமல் கீழே சென்றாலும் , நம்முடைய இழப்பு என்பது , நாம் நிர்ணயித்த ஸ்டாப் லாஸுடன் நின்று விடும், மாறாக விலை மீண்டும் ஏறும் எனக்காத்திருந்தால் , விலை மிகக்கீழ் நோக்கி சென்று கொண்டிருக்கும், அப்போது நாம் பதட்டமாக மிகவும் கீழ் விலையில் அந்த வணிகத்தை நிறைவு செய்வோம்.
விளைவு? குறிப்பிட்ட , நம் இலக்கு நட்டத்தைவிட பல மடங்கு , நட்டம்.

எனவே, ஸ்டாப் லாஸ் என்பது அவசியம், அத்தியாவசியமும் கூட, என்பதை மறவாதீர் ஒரு போதும்.

* ஆயினும் ஒரு தகவல், ஸ்டாப்  லாஸ் மூலம் எத்தனை நட்டம் நாம் சந்தித்தாலும், அதை சரி செய்து விடலாம் , ஆனால் ஸ்டாப் லாஸ் இல்லாமல் செய்த வணிகம் மூலம் பட்ட நட்டத்தை அவ்வளவு எளிதில் சரி செய்ய முடியாது, முயன்றால் மீண்டும் மீண்டும் தவறு நடக்கும், எனவே மிக கவனம் தேவை எப்போதும் !


பொருள் வணிகத்தில் நீங்கள் வெற்றி பெற நல் வாழ்த்துக்கள்!

வேறு ஒரு தகவலுடன் மீண்டும் சந்திப்போம், நன்றி!Saturday, April 13, 2013

கமோடிட்டி வணிகம்

கமோடிட்டி வணிகம் 


                    உங்களில் எத்தனை பேருக்கு , இந்த தகவல்கள்  பயன் தந்திருக்கும் என, நான் அறிகிலேன்,

                    ஆயினும் ,  உங்களில்  யாராவது   ஒருவர் , இந்த  அறிமுகம்  மூலம் , பயன் பெற்றார் என்றால் , அது தான் எனக்கு மிக்க மகிழ்ச்சி தரும் விசயமாகும்.

உங்கள் கருத்துக்களை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்!

அன்புடன்,

ஞானக்குமாரன்.

Monday, March 18, 2013

கம்மோடிடி மார்க்கெட்


கம்மோடிடி மார்க்கெட்

இதுவரை நாம் கம்மோடிடி மார்க்கெட் பற்றியும் அதில் வணிகமாகிற பொருட்கள் பற்றியும் பார்த்தோம்,

இனி நாம், கம்மோடிடி மார்க்கெட் பொருட்கள் விலை ஏற்றம்,இறக்கம் பற்றியும், வணிகம் செய்வதைப்பற்றியும் , காண்போம்.

பொருட்களின் விலை ஏற்ற,இறக்கத்தின் முக்கிய காரணி ,   யு எஸ் டாலரின் சர்வதேச மதிப்பு.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு காரணிகளால், அமெரிக்க டாலரின் மதிப்பு மற்ற நாடுகளின் கரன்சிக்கு எதிராக அதிகரிக்கும் அல்லது குறையக்கூடும்.

மற்றும், ஏற்கெனவே, குறிப்பிட்டது போல, வணிகமாகும் பொருட்களின் கூடுதல் உற்பத்தி, மற்றும் தேவைக்கு குறைவான சந்தை இருப்பு போன்ற காரணங்களால், பொருட்களின் விலையில் மாற்றம் வரும்.

 இதுபோன்ற காரணங்களாலும், மற்றும் அமெரிக்க பொருளாதார வாராந்திர அறிக்கைகளாலும், சந்தையில் மாற்றம் வரும். உதாரணமாக , அமெரிக்க வாராந்திர அன் எம்ப்ளாய்மென்ட் அறிக்கையில் , எதிர்பார்ப்புக்கு மேல் ,வேலை இல்லாதோர் இருந்தால் , அந்த நேரம் சந்தையில் , தங்கம் ,வெள்ளி உள்ளிட்ட சில பொருட்கள் விலை சரியும்.

நல்லது, நாம் இப்போது சற்றே , கம்மோடிடி மார்கெட் பற்றியும் அதன் பொருட்களின் விவரம் ,விலை , மற்றும் விலை மாற்றகே காரணிகளைப்பற்றி, சற்றே சுருக்கமாக, எளிமையான வகையில், பார்த்தோம்.

உங்களுக்கு, பயனுள்ள வகையில் , விளக்கம் இருந்திருக்கும் என நம்புகிறேன்.

உங்கள் , கருத்துக்களை எதிர்நோக்கி ,

அன்புடன்,

ஞானகுமாரன்.Saturday, March 2, 2013

கமோடிட்டி மார்கெட் - பொருட்களின் விலை நிர்ணயம் மற்றும் வணிகம்.
கமோடிட்டி மார்கெட் என்றால் என்ன,என்பதைப்பற்றியும் ,அதில் வணிகமாகின்ற பொருட்களைப்பற்றியும், சென்ற பதிவில் பார்த்தோம், இனி, அதன் அடுத்த நிலையைக் காணலாம்.

கமோடிட்டி பொருட்களின் விலை நிர்ணயம் மற்றும் வணிகம்.


கமோடிட்டி மார்க்கெட் , உலகின் பல சந்தைகள் மற்றும் உலக பொருளாதார நிலைக்கேற்றவாறு இயங்குகிறது. இதை சற்று விளக்கமாக பார்ப்போம்.


உதாரணத்திற்கு, சந்தையில் அதிகம் வணிகமாகும் காப்பர் பற்றி பார்போம்.

காப்பர்,zinc ,lead ,அலுமினியம்,நிக்கல் போன்றவை   BASE METAL எனப்படும், இவை உலகில் பல நாடுகளில் உற்பத்தி ஆனாலும், இவை பொதுவாக ,லண்டன் மற்றும் அமெரிக்க கம்மோடிடி சந்தைகளில் பட்டியலிடப்பட்டு, விற்பனையாகின்றன.


இவற்றின் மொத்த மாதாந்திர , வருடாந்திர இருப்பு நிலவரம், விலை ,மார்க்கெட் ஆர்டர்கள்,போன்றவை அன்றாடம் நாம் அறியும் வகையில்,இணைய தளங்கள் வாயிலாக , வெளியிடப்படுகின்றன.

உலகில் ஒரு நாடு தன் தேவைக்கு, காப்பர் இறக்குமதி செய்கிறது, அதன தேவைகள் அதிகரிக்கும்போது, காப்பர் உற்பத்தி [ காப்பர் ஸ்டாக் ] சந்தையில் குறைவாக இருந்தால் , காப்பரின் விலை உயரும், மாறாக அதன் தேவைகள் குறையும்போது , காப்பர் ஸ்டாக்கும் அதிகம் இருந்தால் விலை குறையும் வாய்ப்பு உண்டு.

இது உதாரணத்திற்கு தான் , கம்மோடிடி பொருட்கள் விலை ஏற்ற இறக்கத்திற்கு வேறு பல முக்கிய காரணங்களும் உண்டு.

இப்போது மற்ற ஒரு முக்கியமான காரணியை பார்ப்போம், மேல் குறிப்பிட்டதைப்போல் , மார்கெட்டில் காப்பர் அதிக தேவை உள்ளது, உற்பத்தியும் குறைவாக உள்ளது , ஆனால் , விலை ஏற வில்லை, மாறாக சற்றே குறைந்து விற்பனை ஆகிறது, ஏன்?

இதுதான் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான காரணியான கரன்சி மார்க்கெட் அல்லது  ஃபாரெக்ஸ் மார்க்கெட்.

இன்று உலகின் பொது கரென்சியாக அமெரிக்கப்பணமான , டாலர் உள்ளது,உலகின் எந்த நாடுகளும் , மனிதர்களும் , பிற நாடுகளிடமிருந்து, பொருளோ, சேவையோ பெறும்போது, அதற்கு பணம் அமெரிக்க டாலரில் தான் அளிக்க வேண்டும், [ இதற்கு மாற்றாக பல முயற்சிகள் தொடங்கி நடக்கின்றன , என்பது வேறு விஷயம், அதை பிறகு காணலாம்]

இந்த அமெரிக்க டாலர், பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக்  காரணிகளால் , ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகும்,  FOREX எனப்படும் கரன்சி மார்க்கெட்டில்.அமெரிக்க டாலர் மட்டும் இலை, உலகின் அனைத்து நாடுகளின் பணமும் இங்கு வர்த்தகமாகும், இதை ஜஸ்ட் தெரிந்து கொண்டால் போதும் , இது மிகப்பெரிய சப்ஜெக்ட், எனவே இத்துடன் , நாம் மீண்டும் கம்மோடிடி மார்க்கெட் சென்று விடுவோம், வாருங்கள்.

மேலே குறிப்பிட்ட போரெக்ஸ் வணிக, ஏற்ற இறக்கங்களினால் அமெரிக்க டாலருக்கு நிகரான, நம்முடைய இந்திய ரூபாய் மதிப்பு, கூடும் அல்லது குறையும்.

மேலும் இந்திய பொருளாதாரம் சற்றே முன்னேற்றம் காணும்போதும், அமெரிக்க பொருளாதாரம் சரியும்போதும், டாலருக்கு நிகரான , இநதிய ரூபாய் மதிப்பு அதகரிக்கும்.

அப்போது கம்மோடிடி மார்க்கெட் பொருட்கள் விலைகளும்  , இறக்கத்துடன் இந்திய கம்மோடிடி சந்தையில் ,காணப்படும்.
 [உலக கம்மோடிடி சந்தைகள் அமெரிக்க டாலர் மதிப்பில் இயங்குவதால்]

இந்த விலை மாற்றம், கம்மோடிடி சந்தையில் வணிகமாகும் தங்கம்,வெள்ளி,க்ருட் ஆயில், உள்ளிட்ட எல்லாப்பொருட்களுக்கும் பொருந்தும்.

அவ்வளவுதான் , கம்மோடிடி சந்தையில் பொருட்களின் விலையை  நிர்ணயிக்கும் சர்வதேச காரணிகளின் தகவல்கள் !

இத்துடன் இன்றைய பகுதியை நிறைவு செய்வோம் , மீண்டும் சந்திப்போம், நன்றி!Friday, March 1, 2013

கம்மோடிடி வணிகம் - அறிமுகம்வணக்கம் !


நேற்றைய பதிவில் குறிப்பிட்ட கம்மோடிடி அடிப்படை விசயங்களில் ஒன்றை, இன்று தெரிந்து கொள்வோம்!


1. கம்மோடிடி வணிகம் என்றால் என்ன?கம்மோடிடி வணிகம் புதிதான ஒன்றல்ல நம் முன்னோர்கள் இதில் சிறந்து விளங்கி இருக்கிறார்கள், மன்னர் காலத்திலும் பிற்காலத்திலும் , கம்மோடிடி வணிகம் பண்ட மாற்று முறையில் காணப்பட்டது, உதாரணமாக, கடல் கடந்து வாணிபம் செய்ய நம் நாட்டிற்கு வந்த வியாபாரிகள் நம்மிடம் இருந்து அரிசி,தானியங்கள் பெற்றுக்கொண்டு அதற்கு மாற்றாக குதிரைகளும்,பட்டு துணிகளும் வழங்கினர். 

அதே தான் இங்கும் , என்ன பண்ட மாற்றுக்கு பதில் கரன்சியில் வர்த்தகம், அதாவது, பொருட்களை விலை கொடுத்து வாங்க முடியுமே தவிர வேறு பொருட்களை கொண்டு வாங்க இயலாது.இன்றைய அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றத்தால், இன்று வணிகம் அதன் உச்ச நிலையில் இருக்கிறது.
அதே போல் , உலக நாடுகளில் அரசாங்க ஒப்புதலோடு , வழிகாட்டுதலோடு, கம்மோடிடி சந்தைகள் இயங்குகின்றன. இந்தியாவில் கம்மோடிடி சந்தை நிர்வாகம் மத்திய அரசின் அனுமதியோடு இயங்குகின்றது.கம்மோடிடி சந்தை உலக கம்மோடிடி சந்தை நிலவரத்தை ஒட்டியே இயங்கின்றன.வணிகச் சந்தையின் தரகர்கள் எனச் சொல்லப்படும் நிறுவனங்கள் மூலம் வணிகம் தினசரி நடைபெறுகிறது, நாம் வணிகம் செய்ய ஒரு தரகரிடம் நாம் உறுப்பினராக சேர வேண்டும்.

வணிகத் தரகர்கள் உறுப்பினர்களுக்கு [ அதாவது நம்மைப் போன்றவர்களுக்கு ] அளிக்கும் சேவை ,வணிகத் தகவல்கள்,  பணப் பரிமாற்றம், வணிக தரகு [ BROKERAGE ]போன்றவற்றில் வெளிப்படை தன்மை ஆகியவற்றை கம்மோடிடி சந்தை உறுதி செய்கின்றன.

இங்கு 2 விதமாக, வணிகம் செய்யலாம்,
ஒன்று பொருட்களை வாங்கும் பொருட்டு வணிகம் செய்வது, உதாரணமாக தங்கம் மற்றும் வெள்ளி.

மற்றது, பொருட்களை நாம் வாங்கிக்கொள்ளாமல் , அதன் விலை நிலவரத்தை ஒட்டி online ல் வாங்குவது , நமக்கு இலாபம் கிடைத்தவுடன் விற்று விடுவது.

இங்கே வணிகமும் 2 விதமாக செய்யலாம், ஓன்று வாங்கி விற்பது , மற்ற ஒன்று விற்று வாங்குவது. இதைப்பற்றி பின்னர் விரிவாக பார்ப்போம்.

கம்மோடிடி சந்தைகளும் 2 உள்ளன, ஒன்று உலகாவிய வணிகப் பொருட்களான PRECIOUS METAL எனச் சொல்லப்படும் GOLD ,SILVER, BASE METAL எனச் சொல்லப்படும் COPPER, ALUMINIUM, NICKEL , LEAD , ZINC மற்றும் ENERGY பொருட்கள் எனச் சொல்லப்படும் CRUDE OIL , NATURAL GAS போன்ற பொருட்கள் விற்பனையாகும் MCX என்ற சந்தையும் ,

மற்றும் நம் நாட்டில் உற்பத்தியாகும் SPICE [ மிளகு, ஏலக்காய் ,உருளை போன்ற பொருட்கள் விற்பனையாகும் NCDX என்ற ஒரு சந்தையும் செயல்படுகின்றன.

இரண்டிலும் நாம் வணிகம் செய்யலாம், எனினும் MCX  உலகளாவிய மார்க்கெட் பொருட்கள் விற்பனைச் சந்தை என்பதாலும் மற்றும் பொருட்களைப் பற்றிய உடனடி உலகளாவிய சந்தை நிலவரம் அதிகம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாலும் , எல்லோரும் வணிகம் செய்யும் சந்தையாக உள்ளது.

Traders யாவரும் இலாபம் சம்பாதிக்கவே வருகின்றனர், அவரவர், வசதி, நேரம் ,  கம்மோடிடி சந்தையைப்பற்றிய அனுபவம் மற்றும்

தேர்ச்சி,உள்ளிட்ட பிற காரணிகளைப பொறுத்து, அவர்களின் வணிக முயற்சி வெற்றி பெறுகிறது.

இப்போது ஓரளவு , நீங்கள் கம்மோடிடி சந்தையைப்  பற்றி அறிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.

மீண்டும் சந்திப்போம், மற்றுமொரு தகவலுடன்.

நன்றி!

Wednesday, February 27, 2013

கம்மோடிடி வணிகம்!


கம்மோடிடி வணிகம்!


வணக்கம் ,

 தமிழில் கம்மோடிடி மார்க்கெட் பற்றிய எளிய அறிமுக மற்றும் விளக்க தளம்.

 இந்த தளம் , கம்மோடிடி வணிகம் பற்றிய ஆர்வம் இருக்கும், சரியான தகவல் இல்லாது ,அல்லது ஆலோசனைகள் இல்லாமல், தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் இருக்கும் எராளமானோருக்கு, தகுந்த வகையில் எளிய விளக்கங்களுடன் இருக்கும் என்ற வகையில், நாம் செல்லலாம் வாருங்கள்!


ஏற்கெனவே கம்மோடிடி வணிகத்தில் இருப்பவர்களும், அல்லது கம்மோடிடி வணிகம் விரும்பாதவர்களும், தயவு செய்து  பிற பதிவுகளைப்  பாருங்கள், நன்றி!


ஞானா பக்கங்கள்!


ஒரு வினாடி!


முதலில், கம்மோடிடி மார்க்கெட் ஒன்றும் புரியாத புதிர் அல்ல, அது பணம் படைததவர்களும் , உலக பொருளாதார அறிவு உள்ளவர்களும் பணம் சம்பாதிக்கும் இடமும் அல்ல.


ஆர்வமும், வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன், மேலான எதிர்கால இலட்சியங்களை அடைய துடிப்பும் இருந்தால்,  கம்மோடிடி வணிகத்தில் சாதனைகள் சாத்தியமே!கம்மோடிடி வணிகம்!

இன்றைய உலகில் , எவரும் வீட்டில் இருந்தே பணம் சம்பாதிக்க அற்புத வாய்ப்பு  தரும் ஒரு சிறந்தவணிக சாளரம் தான்  தான் கம்மோடிடி மார்க்கெட் .


வேண்டியது தளராத ஊக்கமும், விடாமுயற்சியும் பொறுமையும்தான்.


இந்த இடம், உங்களுக்கு கம்மோடிடி மார்க்கெட் பற்றிய அறிமுகம் மற்றும் இலகுவாக வணிகப் பயிற்சியையும்  அளிக்கும்.


சரி, யார் யாரெல்லாம் வணிகம் செய்யலாம்?


ஆர்வமுள்ள யாவரும் , பேதங்கள் ஏதுமில்லை, இங்கே. குறிப்பிட்ட நேரம் மட்டும் தினமும் அல்லது வாரத்தில் சில நாட்கள் trade செய்யலாம்.


சரி எதற்காக நாம் வணிகம் செய்ய வேண்டும்?


தேவைகளைப் பொறுத்து, நமக்கு தேவையான அளவு பணம் சம்பாதிக்க!


பேராசைப்படாத , பொறுமை இருந்தால் , எத்தகைய வெற்றியும் கம்மோடிடி வணிகத்தில் , சாத்தியமே!


உங்களுக்கு ஒரு சந்தேகம் தோன்றலாம் , ஏன் கம்மோடிடி வணிகம் , பங்கு சந்தை வணிகம் என் செய்யக்கூடாது என்று, நியாயம் தான், எல்லா சந்தைகளுமே , உச்ச பட்ச ரிஸ்க் உள்ள சந்தைகள் தான் , சிறப்பாக ஏன் கம்மோடிடி என்றால் ஒரே பதில், இதன் வணிக நேரம் மற்றும் வணிகப் பொருட்களின் தன்மை தான்.


காலை முதல் இரவு வரை சந்தை இயங்கும் ,மற்றும் பொருட்களின் விலை உலக பொருளாதார விலை நிலவரத்தை ஒட்டியே இருக்கும்,


நாம் உபயோகிக்கும் அல்லது மறைமுகமாக உபயோகிக்கும் பொருட்கள் தான் கம்மோடிடி சந்தையில் உள்ளது, எனவே நாம் சற்றே அதன் மதிப்பை உணர்ந்து கொண்டால் , நாமும் வெல்லலாம் கம்மோடிடி வணிகத்தில் !.


தேவை எல்லாம் , அடிப்படை கம்ப்யூட்டர் இயக்கும் அனுபவமும் , இன்டர்நெட் இணைப்பும் தான்.


இனி, நாம் கம்மோடிடி மார்க்கெட் பற்றி அறிவோம் வாருங்கள்!