Thursday, August 29, 2013

அருமை நண்பர்களே!

அவரவர் வாழ்வியல் காரணிகளால், கமோடிடி வணிகம் , மூலம் பொருளீட்டி, குடும்ப வாழ்வு மேம்பட அல்லது சம்பளப்பற்றாகுறை காரணமாக பகுதி நேரம் கமோடிடி வணிகம் செய்துகொண்டிருக்கும், உங்களுக்கு, நீங்கள் கமோடிடி வணிகத்தில் வெற்றி பெற்று பொருளாதார தன்னிறைவு அடைய எமது உளப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்!

நீங்கள் முதலீடு செய்துள்ள பணம் , உங்களுக்கு மிக மிகத்தேவையான ஒன்று, இதர வருமானம் கருதி , இங்கே அத்தொகையை முதலீடு செய்திருக்கிறீர்கள், மேலும் , நீங்கள் யாவரும் செய்வது மற்றும் செய்ய விரும்புவது , தின வணிகம் தான், பெருந்தொகையை இன்வெஸ்ட் செய்துவிட்டு, மாதக்கணக்கில் காத்திருந்து, அதில் இலாபம் சம்பாதிக்க மிகப் பணம் படைத்தோர் அதிக அளவில் இருக்கின்றனர்.

ஆயினும் சிறிய தொகையை வணிகத்தில் முதலீடு செய்துவிட்டு,அதன் மூலம் சிறிய அளவில் பொருளீட்டி, வாழ்வியல் தேவைகளை நிறைவேற்ற எண்ணும் அனபர்கள் மூலதனத்தில் அதிக அக்கறை கொள்ளவேண்டும் அல்லவா?

ஆயினும், எந்த நிலை வணிகம் செய்வோர் ஆயினும், அங்கே முகம் தெரியாது, உறவு தெரியாது, நாம் வணிகத்தில் ஈடுபடும்போது, நாம் ஒரு பொருளை வாங்கும் போது அது யாரிடம் இருந்து வாங்கினோம் எனத்தெரியுமா என்ன? மேலும், நாம் அதிக இலாபம் அந்த வணிகத்தில் அடைந்ததும், அவரைக்கூப்பிட்டு , உங்களிடம் வாங்கி நான் நல்ல இலாபம் பெற்றேன் எனக் கூறமுடியுமா என்ன? இல்லை, நஷ்டத்தில் நான் உங்களிடம் வாங்கித் தான் என் முதல் எல்லாம் போயிற்று, எனவே எனக்கு நஷ்ட ஈடு தாருங்கள் எனக் கூறமுடியுமா? வாய்ப்பு இருக்கிறதா?

இதெல்லாம், நீங்கள் அறிந்ததுதான், ஏன் இங்கே, பகிர்கிறோம் என்றால், கமோடிடி வணிகத்தில் முடிவு எடுத்து வணிகத்தில் இறங்குவதில் நாம் தான் இராஜா மந்திரி எல்லாம், ஏன் சமயத்தில் ஏவலாளும் நாம்தான். அதனால், வெற்றி என்பது எப்படி நமது இலக்கோ,இலட்சியமோ அப்படி த்தான் தோல்வி என்பதும் நம்மைத் தொடர்ந்து வரும் ஒரு விசயம் தான். கொஞ்சம் பிசகினால், நம்மை அடையத் தோல்வி காத்திருக்கிறது.

நாம் விலகிச்செல்ல விரும்பும் ஒன்று, நாம் அனுபவிக்க வேண்டாத ஒன்று என நாம் மனதில் நினைக்கும் ஒன்று நம்மை அடைய நாமே, இடம் கொடுத்து விடக்கூடாது!

வெற்றி என்பது ந்மது செயலில் இருக்கிறது! அதில் நமது ஈடுபாட்டில் இருக்கிறது! அர்ப்பணிப்புடன் கூடிய விழிப்புணர்வில் இருக்கிறது!

தவறான செயல்கள் என்றும் நம்மைக் கடைத்தேற்றாது, அதில் நாம் நிச்சயம் வெல்லவும் முடியாது என எல்லா மதங்களின் போதனைகளும் கூறுகின்றன. 

அந்த போதனை கமோடிடி வணிகத்திற்கும் பொருந்தும்.இங்கே, தவறான செயல் என்பது என்ன, சந்தைப்போக்கை கவனியாமல் அல்லது அலட்சியப்போக்கில், நான் கணிப்பது நிச்சயம் நடக்கும் என்ற அதீதத் தன்னம்பிக்கையில் வணிகத்தை அணுகுவது,சந்தையில் பொருளின் தற்போதைய நிலை பற்றி அறியாமல், வணிகத்தில் ஈடுபடுவது,மேலும் ஸ்டாப் லாஸ் இல்லாத வணிகம் , எப்படி இலாபத்தில் முடியும் என யோசித்தீர்களா?

யோசித்து செயல்பட்டு , கமோடிடி வணிகத்தில் வெற்றியடையுங்கள்! 
ஆரோக்கியமான நல் எண்ணங்களால் உங்கள் வாழ்வை வளமாக்குங்கள்! 

மீண்டும் சந்திப்போம்!

தங்களின் மேலான கருத்துக்களை, அன்புடன் வரவேற்கிறோம்!

ஞானக்குமாரன்.