Friday, October 4, 2013

இன்ஸ்டன்ட் வணிகம் - இன்ஸ்டன்ட் இலாபம்

வணக்கம் அன்பு கமோடிட்டி வணிக நண்பர்களே!



 கால தாமதத்திற்கு வருந்துகிறேன்.இன்றைய பதிவில் எப்படி இன்ஸ்டன்ட் இலாபம் சம்பாதிப்பது எனப் பார்க்கலாம். தயவுசெய்து வணிகத்தில் அனுபவம்  கொண்டவர்கள் மட்டுமே இதை, முயன்று பாருங்கள். மற்றவர்கள் எமது ஆரம்ப கட்டுரைகளை வாசித்துவிட்டு , நிறைய  பயிற்சிகளுக்குப்பின் வணிகத்தில் இறங்கவும்.

இனி இன்ஸ்டன்ட் வணிகம் பற்றி பார்ப்போம். இது ஓன்றுமில்லை, நாள் முழுவதும் கணினி முன் அமர்ந்து வணிகத்தின் போக்கை உணர்ந்து கொண்டு , வணிகம் செய்யாமல் , சற்றே நேரத்தில் , உடனடி இலாபம் சம்பாதிக்கும் கலை இது.

மிகுந்த முயற்சிகளுக்குப்பின் , அடைந்த பலனை , யாரும் வெளியே சொல்லாமல்  தாம் மட்டும் அனுபவிக்கும் சித்த மூலிகை இரசியம் போன்ற இந்த விஷயத்தை,  பொதுவில் வைப்பது எமக்கு மகிழ்ச்சியே!

யாம் பெற்ற வெற்றி , யாவரும் பெறட்டும்! 

இனி வணிகத்தை, சந்தையை கவனிப்போம். மதியம் 3 மணி அல்லது, இரவு 9 மணி எனககொள்வோம், அதாவது ஐரோப்பிய சந்தைகளும்,அமெரிக்க சந்தைகளும்  ஆரம்பித்த சற்று நேரம் கழித்து , சந்தையின் போக்கினை வழக்கமான பொருட்களின் இருப்பு,விலை,ரூபாய் மதிப்பு மற்றும் பிற காரணிகள் கொண்டு மனதில் இருத்திக்கொண்டு , வணிகம் செய்ய விரும்பும் பொருளின் சந்தைபோக்கினை கவனியுங்கள்.

பொருளின் விலை அன்றைய உச்சத்தையோ அல்லது கீழ்நிலையையோ தொடும் அருகில் இருந்தால் , விற்கவோ அல்லது வாங்கவோ செய்யுங்கள். அதாவது , உச்சத்தின் அருகே விற்றுவிடுங்கள் , கீழ் நிலையின் அருகே வாங்கி விடுங்கள் , சற்று நேரத்தில் ,வெகு விரைவில் சிறிய மாற்றத்தில் , கிடைத்த இலாபத்தில் விற்று விடுங்கள் , நிச்சயம் இலாபம் கிடைக்கும், லாட்களின் எண்ணிக்கை கூடும்போது கணிசமான் இலாபம் நிச்சயம்!  

மீண்டும் ஒரு முறை எச்சரிக்கிறேன், மிக  அனுபவம் கொண்டவர்கள் மட்டும் முயற்சி செய்ய வேண்டிய வணிகம் இது, ஸ்டாப் லாஸ் அவசியம்.ரிஸ்க் அதிகம் இருப்பதால், புதியவர்கள் , ஒரே நாளில் , நிறைய சம்பாதிக்க எண்ணி ,  ஒரு மாதத்தில் சம்பாதிப்பதை ஒரு நாளில் சம்பாதிக்க நினைத்து , முயன்று  இருப்பதை இழக்காதீர்கள்.

இந்த பதிவு அனுபவம் கொண்ட , தேவையான அளவு முதலீடு கொண்ட , வணிகர்களுக்கானது. அவர்களுக்குத்தான் ஏற்கெனவே , தெரியுமே, நீங்கள் என்ன புதிதாக சொல்ல வந்து விட்டீர்கள் என நீங்கள் கேட்கலாம், 

உண்மை என்னவெனில், என்ன தான் நன்றாகப்படித்து விட்டு பரிட்சை எழுதப்போனாலும், சில சமயம் படித்தது மறந்து போகும், அதுவும் மிக நன்றாக படித்தது தெரிந்தது சமயத்தில் ஞாபகத்தில் வராது சிரமப்படுத்தும், அத்தகைய நிலை ஏற்பட விடாமல் அனுபவ வணிகர்களுக்கு அவர்கள் அறிந்த விஷயத்தை மீண்டும் மீண்டும் அவர்கள் படிக்க கேட்க நேரும் பொது , நிச்சயம் மறதி  ஏற்படாமல் என்றும் மனதில் இருக்கும் , மேலும் இது உங்களுக்கான , புதியவர்களுக்கான பதிவும் கூட , உங்களை ஊக்கப்படுத்தி , நிறைந்த அனுபவத்திற்கு பிறகு ,எத்தகைய வணிகப்போக்கிலும் வெல்லலாம், குறைந்த நேரத்தில் , இலாபம் ஈட்டலாம் எனும் நற்ச்செய்தியை உங்களுக்கு சொல்லும் பதிவும் கூட இது!

நிறைந்த அனுபவத்தின் மூலம் வணிகத்தில் வெல்ல எமது நல்வாழ்த்துக்கள்!