Friday, March 1, 2013

கம்மோடிடி வணிகம் - அறிமுகம்



வணக்கம் !


நேற்றைய பதிவில் குறிப்பிட்ட கம்மோடிடி அடிப்படை விசயங்களில் ஒன்றை, இன்று தெரிந்து கொள்வோம்!


1. கம்மோடிடி வணிகம் என்றால் என்ன?







கம்மோடிடி வணிகம் புதிதான ஒன்றல்ல நம் முன்னோர்கள் இதில் சிறந்து விளங்கி இருக்கிறார்கள், மன்னர் காலத்திலும் பிற்காலத்திலும் , கம்மோடிடி வணிகம் பண்ட மாற்று முறையில் காணப்பட்டது, உதாரணமாக, கடல் கடந்து வாணிபம் செய்ய நம் நாட்டிற்கு வந்த வியாபாரிகள் நம்மிடம் இருந்து அரிசி,தானியங்கள் பெற்றுக்கொண்டு அதற்கு மாற்றாக குதிரைகளும்,பட்டு துணிகளும் வழங்கினர். 

அதே தான் இங்கும் , என்ன பண்ட மாற்றுக்கு பதில் கரன்சியில் வர்த்தகம், அதாவது, பொருட்களை விலை கொடுத்து வாங்க முடியுமே தவிர வேறு பொருட்களை கொண்டு வாங்க இயலாது.இன்றைய அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றத்தால், இன்று வணிகம் அதன் உச்ச நிலையில் இருக்கிறது.
அதே போல் , உலக நாடுகளில் அரசாங்க ஒப்புதலோடு , வழிகாட்டுதலோடு, கம்மோடிடி சந்தைகள் இயங்குகின்றன. இந்தியாவில் கம்மோடிடி சந்தை நிர்வாகம் மத்திய அரசின் அனுமதியோடு இயங்குகின்றது.கம்மோடிடி சந்தை உலக கம்மோடிடி சந்தை நிலவரத்தை ஒட்டியே இயங்கின்றன.வணிகச் சந்தையின் தரகர்கள் எனச் சொல்லப்படும் நிறுவனங்கள் மூலம் வணிகம் தினசரி நடைபெறுகிறது, நாம் வணிகம் செய்ய ஒரு தரகரிடம் நாம் உறுப்பினராக சேர வேண்டும்.

வணிகத் தரகர்கள் உறுப்பினர்களுக்கு [ அதாவது நம்மைப் போன்றவர்களுக்கு ] அளிக்கும் சேவை ,வணிகத் தகவல்கள்,  பணப் பரிமாற்றம், வணிக தரகு [ BROKERAGE ]போன்றவற்றில் வெளிப்படை தன்மை ஆகியவற்றை கம்மோடிடி சந்தை உறுதி செய்கின்றன.

இங்கு 2 விதமாக, வணிகம் செய்யலாம்,




ஒன்று பொருட்களை வாங்கும் பொருட்டு வணிகம் செய்வது, உதாரணமாக தங்கம் மற்றும் வெள்ளி.

மற்றது, பொருட்களை நாம் வாங்கிக்கொள்ளாமல் , அதன் விலை நிலவரத்தை ஒட்டி online ல் வாங்குவது , நமக்கு இலாபம் கிடைத்தவுடன் விற்று விடுவது.

இங்கே வணிகமும் 2 விதமாக செய்யலாம், ஓன்று வாங்கி விற்பது , மற்ற ஒன்று விற்று வாங்குவது. இதைப்பற்றி பின்னர் விரிவாக பார்ப்போம்.

கம்மோடிடி சந்தைகளும் 2 உள்ளன, ஒன்று உலகாவிய வணிகப் பொருட்களான PRECIOUS METAL எனச் சொல்லப்படும் GOLD ,SILVER, BASE METAL எனச் சொல்லப்படும் COPPER, ALUMINIUM, NICKEL , LEAD , ZINC மற்றும் ENERGY பொருட்கள் எனச் சொல்லப்படும் CRUDE OIL , NATURAL GAS போன்ற பொருட்கள் விற்பனையாகும் MCX என்ற சந்தையும் ,

மற்றும் நம் நாட்டில் உற்பத்தியாகும் SPICE [ மிளகு, ஏலக்காய் ,உருளை போன்ற பொருட்கள் விற்பனையாகும் NCDX என்ற ஒரு சந்தையும் செயல்படுகின்றன.

இரண்டிலும் நாம் வணிகம் செய்யலாம், எனினும் MCX  உலகளாவிய மார்க்கெட் பொருட்கள் விற்பனைச் சந்தை என்பதாலும் மற்றும் பொருட்களைப் பற்றிய உடனடி உலகளாவிய சந்தை நிலவரம் அதிகம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாலும் , எல்லோரும் வணிகம் செய்யும் சந்தையாக உள்ளது.

Traders யாவரும் இலாபம் சம்பாதிக்கவே வருகின்றனர், அவரவர், வசதி, நேரம் ,  கம்மோடிடி சந்தையைப்பற்றிய அனுபவம் மற்றும்

தேர்ச்சி,உள்ளிட்ட பிற காரணிகளைப பொறுத்து, அவர்களின் வணிக முயற்சி வெற்றி பெறுகிறது.

இப்போது ஓரளவு , நீங்கள் கம்மோடிடி சந்தையைப்  பற்றி அறிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.

மீண்டும் சந்திப்போம், மற்றுமொரு தகவலுடன்.

நன்றி!