Saturday, March 2, 2013

கமோடிட்டி மார்கெட் - பொருட்களின் விலை நிர்ணயம் மற்றும் வணிகம்.




கமோடிட்டி மார்கெட் என்றால் என்ன,என்பதைப்பற்றியும் ,அதில் வணிகமாகின்ற பொருட்களைப்பற்றியும், சென்ற பதிவில் பார்த்தோம், இனி, அதன் அடுத்த நிலையைக் காணலாம்.

கமோடிட்டி பொருட்களின் விலை நிர்ணயம் மற்றும் வணிகம்.


கமோடிட்டி மார்க்கெட் , உலகின் பல சந்தைகள் மற்றும் உலக பொருளாதார நிலைக்கேற்றவாறு இயங்குகிறது. இதை சற்று விளக்கமாக பார்ப்போம்.


உதாரணத்திற்கு, சந்தையில் அதிகம் வணிகமாகும் காப்பர் பற்றி பார்போம்.

காப்பர்,zinc ,lead ,அலுமினியம்,நிக்கல் போன்றவை   BASE METAL எனப்படும், இவை உலகில் பல நாடுகளில் உற்பத்தி ஆனாலும், இவை பொதுவாக ,லண்டன் மற்றும் அமெரிக்க கம்மோடிடி சந்தைகளில் பட்டியலிடப்பட்டு, விற்பனையாகின்றன.


இவற்றின் மொத்த மாதாந்திர , வருடாந்திர இருப்பு நிலவரம், விலை ,மார்க்கெட் ஆர்டர்கள்,போன்றவை அன்றாடம் நாம் அறியும் வகையில்,இணைய தளங்கள் வாயிலாக , வெளியிடப்படுகின்றன.

உலகில் ஒரு நாடு தன் தேவைக்கு, காப்பர் இறக்குமதி செய்கிறது, அதன தேவைகள் அதிகரிக்கும்போது, காப்பர் உற்பத்தி [ காப்பர் ஸ்டாக் ] சந்தையில் குறைவாக இருந்தால் , காப்பரின் விலை உயரும், மாறாக அதன் தேவைகள் குறையும்போது , காப்பர் ஸ்டாக்கும் அதிகம் இருந்தால் விலை குறையும் வாய்ப்பு உண்டு.

இது உதாரணத்திற்கு தான் , கம்மோடிடி பொருட்கள் விலை ஏற்ற இறக்கத்திற்கு வேறு பல முக்கிய காரணங்களும் உண்டு.

இப்போது மற்ற ஒரு முக்கியமான காரணியை பார்ப்போம், மேல் குறிப்பிட்டதைப்போல் , மார்கெட்டில் காப்பர் அதிக தேவை உள்ளது, உற்பத்தியும் குறைவாக உள்ளது , ஆனால் , விலை ஏற வில்லை, மாறாக சற்றே குறைந்து விற்பனை ஆகிறது, ஏன்?

இதுதான் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான காரணியான கரன்சி மார்க்கெட் அல்லது  ஃபாரெக்ஸ் மார்க்கெட்.

இன்று உலகின் பொது கரென்சியாக அமெரிக்கப்பணமான , டாலர் உள்ளது,உலகின் எந்த நாடுகளும் , மனிதர்களும் , பிற நாடுகளிடமிருந்து, பொருளோ, சேவையோ பெறும்போது, அதற்கு பணம் அமெரிக்க டாலரில் தான் அளிக்க வேண்டும், [ இதற்கு மாற்றாக பல முயற்சிகள் தொடங்கி நடக்கின்றன , என்பது வேறு விஷயம், அதை பிறகு காணலாம்]

இந்த அமெரிக்க டாலர், பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக்  காரணிகளால் , ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகும்,  FOREX எனப்படும் கரன்சி மார்க்கெட்டில்.அமெரிக்க டாலர் மட்டும் இலை, உலகின் அனைத்து நாடுகளின் பணமும் இங்கு வர்த்தகமாகும், இதை ஜஸ்ட் தெரிந்து கொண்டால் போதும் , இது மிகப்பெரிய சப்ஜெக்ட், எனவே இத்துடன் , நாம் மீண்டும் கம்மோடிடி மார்க்கெட் சென்று விடுவோம், வாருங்கள்.

மேலே குறிப்பிட்ட போரெக்ஸ் வணிக, ஏற்ற இறக்கங்களினால் அமெரிக்க டாலருக்கு நிகரான, நம்முடைய இந்திய ரூபாய் மதிப்பு, கூடும் அல்லது குறையும்.

மேலும் இந்திய பொருளாதாரம் சற்றே முன்னேற்றம் காணும்போதும், அமெரிக்க பொருளாதாரம் சரியும்போதும், டாலருக்கு நிகரான , இநதிய ரூபாய் மதிப்பு அதகரிக்கும்.

அப்போது கம்மோடிடி மார்க்கெட் பொருட்கள் விலைகளும்  , இறக்கத்துடன் இந்திய கம்மோடிடி சந்தையில் ,காணப்படும்.
 [உலக கம்மோடிடி சந்தைகள் அமெரிக்க டாலர் மதிப்பில் இயங்குவதால்]

இந்த விலை மாற்றம், கம்மோடிடி சந்தையில் வணிகமாகும் தங்கம்,வெள்ளி,க்ருட் ஆயில், உள்ளிட்ட எல்லாப்பொருட்களுக்கும் பொருந்தும்.

அவ்வளவுதான் , கம்மோடிடி சந்தையில் பொருட்களின் விலையை  நிர்ணயிக்கும் சர்வதேச காரணிகளின் தகவல்கள் !

இத்துடன் இன்றைய பகுதியை நிறைவு செய்வோம் , மீண்டும் சந்திப்போம், நன்றி!