Saturday, May 11, 2013

கம்மோடிடி வணிகம் - கவனிக்க வேண்டியவை!
 ஸ்டாப் லாஸ்!
                                                                               


இதுவரை நாம் , வணிகத்தின் அடிப்படை மற்றும் பொருட்களின் நிலை அவற்றின் விலை மாறுதல்கள் பற்றி அறிந்தோம்!

இனி, வணிகத்தில் கடைபிடிக்க வேண்டிய உத்திகளைப்  பற்றி பார்ப்போம்.

ஒரு விஷயம் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும், நாம் செய்யப்போவது day trading எனப்படும் தின வணிகம் தான். இதில் நாம் ஒரு பொருளை ஒரு விலைக்கு வாங்கி விட்டு, கருதிய இலாபம் அதில் அடைந்ததும் விற்று விடுவது, ஒரு வகை எல்லோர் மன விருப்பமும் அது  தான்  என்பதில்  ஐயமொன்றுமில்லை, ஆயினும் வேறு சில நாம் 
அறியாக் காரணங்களால், பொருளின் விலை , வாங்கிய விலையை விட, குறைய ஆரம்பித்தால் , என்ன செய்ய முடியும்?, விலை மீண்டும் ஏறும் என எண்ணி இருந்து விட முடியுமா? நம் முதலீடு விரைவில் கரையத்தொடங்கும், என்ன செய்வது?

அப்போது தான் , stoploss என்னும் செயலை நாம் செய்யத்தவறியதன் விளைவுதான் , நம் நட்டம் அதிகரிக்கக் காரணம் என நாம் உணர்ந்து இருப்போம்.

ஸ்டாப் லாஸ் என்றால் என்ன ?

நாம் ஒரு வணிகம் செய்யும் போது , இலாபத்தை கருத்தில்கொண்டு அந்த வணிகத்தின் முடிவை நிர்ணயம் செய்வோம், ஆயினும் பொருளைப்பற்றிய செய்திகளின் அடிப்படையில் , சர்வதேச விலை நிலவர மற்றும் கரன்சி மதிப்பைக் கொண்டு எத்தனை உறுதியாக , நாம் இருந்தாலும், பொருளின் விலை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது, என்ற கருத்தில் , பொருள் நிச்சயம் நாம் குறிப்பிட்ட விலையை எட்டும் ஆயினும்,சந்தை ஏற்ற இறக்கத்தினால் , பொருளின் விலை சற்று கீழே சென்றுவிட்டு பின் மேலேறும் , அந்த கீழே செல்லும் லெவல் தான் நாம் கணித்த ஸ்டாப் லாஸ் லெவல். ஒரு வேலை அந்த நிலையில் விலை மீண்டும் ஏறாமல் கீழே சென்றாலும் , நம்முடைய இழப்பு என்பது , நாம் நிர்ணயித்த ஸ்டாப் லாஸுடன் நின்று விடும், மாறாக விலை மீண்டும் ஏறும் எனக்காத்திருந்தால் , விலை மிகக்கீழ் நோக்கி சென்று கொண்டிருக்கும், அப்போது நாம் பதட்டமாக மிகவும் கீழ் விலையில் அந்த வணிகத்தை நிறைவு செய்வோம்.
விளைவு? குறிப்பிட்ட , நம் இலக்கு நட்டத்தைவிட பல மடங்கு , நட்டம்.

எனவே, ஸ்டாப் லாஸ் என்பது அவசியம், அத்தியாவசியமும் கூட, என்பதை மறவாதீர் ஒரு போதும்.

* ஆயினும் ஒரு தகவல், ஸ்டாப்  லாஸ் மூலம் எத்தனை நட்டம் நாம் சந்தித்தாலும், அதை சரி செய்து விடலாம் , ஆனால் ஸ்டாப் லாஸ் இல்லாமல் செய்த வணிகம் மூலம் பட்ட நட்டத்தை அவ்வளவு எளிதில் சரி செய்ய முடியாது, முயன்றால் மீண்டும் மீண்டும் தவறு நடக்கும், எனவே மிக கவனம் தேவை எப்போதும் !


பொருள் வணிகத்தில் நீங்கள் வெற்றி பெற நல் வாழ்த்துக்கள்!

வேறு ஒரு தகவலுடன் மீண்டும் சந்திப்போம், நன்றி!