Friday, May 24, 2013

வணிகம் செய்ய உகந்த நேரம்




வணிகம் செய்ய உகந்த நேரம்  எது?, இது நிச்சயமாக மில்லியன் டாலர் கேள்வி!



கமோடிட்டி வணிகத்தில், நேரம் தேர்ந்தெடுத்தல் மிக முக்கியம், சந்தை சில காரணிகளால், மாற்றத்தை சந்திக்க தயாராகிக்கொண்டிருக்கும் நேரத்தில், நாம் , அதைக்கருத்தில் கொள்ளாமல், நம்முடைய வேறு சில யூகங்களின் அடிப்படையில், ஒரு பொருளை வாங்கவோ விற்கவோ செய்தால், நிச்சயம் , நம் முடிவு நமக்கு மிகப்பெரிய நட்டத்தைத் தரும் என்பதில் அணு அளவும் சந்தேகமில்லை, ஸ்டாப் லாஸ் போடக்கூட நேரம் கிடைக்காமல், நாம் செய்த வணிகம் நம்மை மிகப்பெரிய 

ந ட்டத்துக்கு ஆளாக்கி விட்டு விடும்.


எனவே, மிக மிக கவனம் தேவை, பல முறை யோசித்து விட்டு , சற்று மார்க்கெட் போக்கை கவனித்து விட்டு, சந்தையை பாதிக்கும் காரணிகளின் அறிக்கை ஏதாவது தற்சமயம் வர இருக்கிறதா , என நிறைய தகவல்கள் சேகரித்து விட்டு , மார்க்கெட் போக்கில் சென்று , வணிகத்தில் வென்று வர , கம்மோடிடி வணிகம் உங்களை வாழ்த்துகிறது!



கவனத்தில் கொள்ள வேண்டிய நாட்கள்:


க்ரூட் ஆயில்  -  ஒவ்வொரு Wednesday தோறும் அமெரிக்க ஆயில் இருப்பு நிலவரம் நம்முடைய நேரம் இரவு 8 மணிக்கு வெளியாகும். - க்ரூட் ஆயில் போக்கைப் பொறுத்து, மிகப்பெரிய விலை வித்தியாசத்தில் உடனடி விலை மாற்றம் நிகழும், அப்போது நாம் அந்த வணிகத்தில் , எதிர்மறை போக்கில் இருந்தால் , நிச்சயம் நட்டத்தை தவிர்க்க இயலாது.



அது போன்ற சமயங்களில், பொதுவாக, க்ரூட் ஆயில் வணிகத்தில் 
ஈடுபடாமல் இருப்பது மிகச்ச்சிறப்பு, அல்லது மிகக்குறைந்த ஸ்டாப் லாஸ் நிச்சயம் இருக்க வேண்டும்.


மிகக்கடுமையான சந்தை மாற்றத்தில் , அமெரிக்க க்ரூட் ஆயில் அறிக்கைக்குப்பின், க்ரூட் ஆயில் விலை கண்ணிமைக்கும் நேரத்தில் , 

45 - 60 [ 4500 முதல் 6000 ருபாய் வரை ]  பாயிண்ட்கள் மாற்றமடையும்.


எச்சரிக்கை தேவை.



இது போன்ற , நுண்ணிய தகவல்களை யாரும் வெளிப்படுத்த மாட்டார்கள், பொது நலம் கருதி, இங்கே வணிக இரகசியங்கள் வெளியிடப்படுகின்றன.



இணைந்திருங்கள், பயன்பெறுங்கள்! வணிகத்தில் வெல்லுங்கள்!