Friday, November 14, 2014


சிரமத்திற்கு வருந்துகிறோம்!

விரைவில் பதிவுகள் வெளிவரும்!


நன்றி!

ஞானா.

Monday, August 18, 2014

வணக்கம் வணிக வாசகர்களே!
தவிர்க்க முடியாத அலுவல்களால், நாம் குறிப்பிட்ட வணிக விவரங்களை வெளியிடமுடியவில்லை. சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்து விரைவில் விவரம் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை தெரிவித்துக்கொண்டு ,  உங்களின் ஆர்வம்,எமக்கு வந்த இமெயில்கள் முலம் அறிந்து கொள்ள முடிந்தது, அதற்காக எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்!

விரைவில் நீங்கள் வணிகத்தில் வெல்ல எமது ஆலோசனைகள் , உங்களுக்கு இமெயில் லிங்க் மூலம் அனுப்பப்படும், மேலும் நீங்கள் இத்தளத்தில் உள்ள இணைப்பு மூலமும் அறிந்து கொள்ளலாம்!நன்றி!

ஞானா.

Friday, August 15, 2014தன்னலம் கருதா தேசத்தியாகிகளின் அர்ப்பணிப்பால், 
பெற்ற சுதந்திரம் பேணிக்காப்போம்!

சுதேசியாய் வாழ்வோம்!

இந்தியராய் பெருமிதம் கொள்வோம்!

நாளைய உலகம் நம் கையில்!


சகல விதத்திலும் வல்லரசு தேசத்தை விரைவில் உருவாக்க நம்பிக்கையுடன் நாம் முயல்வோம், நம்மளவில்! 

கோடிகளும்,இலட்சங்களும் ஒன்றிலிருந்துதான் ஆரம்பிக்கின்றன!


ஒரு முயற்சி ! திரு முயற்சியாகட்டும்!! 

வாழிய தாய்த்திரு நாடு!  வாழ்க எம் தேசம் நீடூழி!!


 110 கோடி இந்தியரின் ஒன்றுபட்ட சிந்தனையால் உலகை வெல்வோம்!

வந்தே மாதரம்!விடுதலைத் திருநாள் நல்வாழ்த்துக்களுடன்,

ஞானா.

Saturday, July 26, 2014

தினசரி MCX மார்க்கெட் வணிக டிப்ஸ்

தினசரி MCX மார்க்கெட் வணிக டிப்ஸ்


கமோடிட்டி வணிக அன்பர்களின்  நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வண்ணம், தினசரி MCX மார்க்கெட் வணிக டிப்ஸ் காலை 11.00 மணிக்குள் வழங்கப்படும். இந்த டிப்ஸ் பதிவு செய்த அன்பர்களுக்கு மட்டுமே!

பதிவு செய்ய!

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் பெயர் , தொழில், வணிக அனுபவம் ,ஊர் பெயர்,ஈமெயில் மற்றும் மொபைல் எண் குறிப்பிட்டு முதல் பக்கத்தில் காணும் தொடர்பு படிவத்தில் எமக்கு அனுப்பி வைக்க வேண்டியது தான். 

தினசரி சந்தையின் போக்கினை ஆராய்ந்து டிப்ஸ், இந்த ப்ளாக்  தளத்தில் உள்ள பாஸ்வோர்ட் பக்கத்தில் வெளியிடப்படும்.

எமது இடைவிடாத முயற்சியும்,ஓய்வறியா உழைப்பும் அடங்கியுள்ள இச்சேவையை தவறாகப்பயன்படுத்தினாலோ அல்லது மறு பதிவு செய்தாலோ , அவர்கள்  பதிவு இரத்து செய்யப்படும். மேலும் நிரந்தரமாக  பிளாக் செய்யப்படுவர்! மன்னிக்கவும்! எம் வாசகர்கள் பற்றி யாமறிவோம்! எனினும் இணையத்தில் இருப்பதால் எச்சரிப்பது கடமை!

கமோடிட்டி வணிக அன்பர்களுக்கு!

இதுவரை நீங்கள் தின வணிகத்தில் எவ்வளவு பணம் இழந்திருக்கிறீர்கள் என்பது போகட்டும்! இனி நீங்கள் தின வணிகத்தில்  தோற்காமல் இருக்க வேண்டும் என்பதே எமது பேரவா!

பேராசையின்றி , தின வணிகம் செய்யுங்கள், வெல்லுங்கள்!

நினைவிருக்கட்டும்! தேவையான அளவு முதலீடு இன்றி , தினசரி வணிக முதலீட்டில் அதிக லிமிட் வாங்கி 4 , 5 லாட் எடுத்து வணிகம் செய்யாதீர்! இருப்பதை இழக்காதீர்! 

இது எமது வாசகர்களுக்கான , தனிப்பட்ட சேவை!

எமது பணியில் திருப்தி இருந்தால் , நீங்கள் விருப்பப்பட்டால்,  எமக்கு அனுப்பும் தொகை , எமது இலட்சியத்தை விரைவில் அடைய உதவும்!

எமது வாசகர்களுக்கு ,தனித்துவமான கமோடிட்டி வணிக இணைய தளம்  மூலம் மேலும் சிறப்பான சேவை வழங்குவதே எமது இலட்சியம்!

 நன்றி!


வாழ்த்துக்களுடன், 

ஞானா.


* வணிகக்காரணிகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டது!


Thursday, July 3, 2014

வணிக நேரம்!         கமோடிடி வணிகம் பகுதியில் நாம் தொடர்பு கொண்டு நீண்ட நாட்களாகிவிட்டன. மன்னிக்க வேண்டும், சில தனிப்பட்ட அலுவல்களால் இந்த, இடைவெளி இங்கே உண்டாகிவிட்டது.

இன்று நாம் பார்க்க இருக்கும் ஒரு விஷயம், சிலருக்கு அது சாதாரண விசயமாகத்தெரியலாம், சிலருக்கு அது பெரிய விசயமாகத்தெரியலாம், எப்படியாயினும், விஷயத்தை தெரிந்துகொண்டு பின்னர் முடிவு செய்து கொள்ளுங்கள்!

என்ன அந்த விஷயம் என்கிறீர்களா?, அதுதான் தலைப்பிலே இருக்கிறதே ஆம், வணிக நேரம் தான் அந்த விஷயம்.

நம்மில் பலருக்கு தினமும் டிரேட் செய்ய விருப்பம் இருக்கும் ஆயினும் நேரம் இருக்காது, எனவே கிடைக்கும் நேரத்தில் வணிகம் செய்வோம் எனப்பலர் என்ன செய்வர் தெரியுமா, தங்களுக்கு ஓய்வான நேரத்தில் டிரேட் செய்வர். அவசர அவசரமாக, அன்றைய மார்க்கெட் வணிகத் தகவல்களை சற்று அலசிவிட்டு முடிவு செய்த பொருளை வாங்கவோ அல்லது விற்கவோ ஆர்டர் செய்வர். 

ஏன் என்றால் , அவர்களுக்கு கிடைத்த இந்த அரை மணியோ அல்லது அதற்கும் குறைந்த நேரத்திலோ இந்த வணிகத்தை நிறைவு செய்ய வேண்டும், எனவே இந்த அவசரம். விளைவு என்னவாகும் ? 

சற்றே பார்ப்போமா, அவர்கள் தேர்வு செய்த நேரம், உலக வணிக சந்தையில் அல்லது இந்திய சந்தையில் மாற்றங்கள் அவ்வளவு இல்லாத ஒரு நேரம், மேலும், பொருட்களின் விலை இந்த நேரத்தில் ஒரு சீரான நிலையில் இருக்காது, வோலட்டைல் [Volatile] எனப்படும் குறைவான விலை மாற்றத்தில் ஊசலாடிக்கொண்டிருக்கும் நேரம் அது.

அந்த நேரத்தில் ஈடுபட்ட வணிகம் என்னவாகும், மேலும் கீழும் குறைந்த விலை வித்தியாசத்தில் உள்ள அந்தப்பொருள் , அவர் குறித்த விலை அருகே வராது நிற்கும், நேரம் ஆகிக்கொண்டிருக்கும், நண்பர் என்ன செய்வார், இனி நேரமில்லை எனவே வணிகத்தை நிறைவு செய்வோம் என உடனே வணிகத்தை முடிப்பார், விளைவு? புரோக்கரேஜ்க்குக்கூட இலாபம் வராமல் , நட்டத்தில் அந்த அவசர வணிகம் முடிவு பெறும் !

எதற்கு இந்த அவசரம், வேகம்? தினமும் வணிகம் செய்ய வேண்டும் என்று ஏதாவது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறோமா? இல்லை தினமும் வணிகம் செய்தால்தான் நமக்கு சாப்பாடு என யாராவது உத்தரவிட்டு உள்ளனரா? இல்லையே! பின் எதற்கு இந்த அவசரம்?

அனாவசியமான நட்டம் மற்றும் தேவையில்லாத பதட்டம்.

வணிகம் தின வணிகம் அல்லது வேறு வகையாயினும் அடிப்படை ஒன்று தான் , வணிகத்தில் நாம் ஈடுபடும் நேரம் தான் அது, ஒன்று ஐரோப்பிய சந்தைகள் திறந்த நேரம் அல்லது அமெரிக்க சந்தைகள் திறந்த நேரம் மேலும் அன்றைய சந்தைபோக்கு காரணிகள் குறித்த தகவல்கள் முறையே அறிந்து அதன் பிறகு, நாம் வணிகம் செய்ய முடிவு செய்த பொருளில்   எவ்வளவு இலாபம் வேண்டுமோ அந்த அளவில் ஒரு அளவு அவசியம் ஸ்டாப் லாஸ் வைத்து வணிகத்தில் ஈடுபடவேண்டும்!

நமக்கு நேரம் இல்லையெனில், பிறகு ஒரு நாள் பார்த்துக்கொள்ளலாம், கிடைக்கும் நேரத்தில் வணிகம் செய்ய, கமோடிட்டி மார்க்கெட் என்ன பெட்டிக்கடையா, நேரம் கிடைக்கும் போது , கடையைத்திறந்து வியாபாரம் செய்ய! அதுவும் சொந்தக்கடை என்றாலாவது விற்பனை ஆகாவிடினும் நட்டமில்லை, பொருள் அப்படியே இருக்கும், ஆயினும் கமோடிட்டி மார்க்கெட்? அப்படியா? கொஞ்சம் அசந்தாலும் , நம்முடைய மூலதனத்தை பெருமளவு இழக்கச்செய்து விடும்!

எனவே, நண்பர்களே!, நீங்கள் செய்யும் தின வணிகம் என்பது , உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது செய்வது அல்ல,  சந்தைகளின் வணிக நேரம் பார்த்து செய்வதாகும்! என நீங்கள் அறிவீர்கள்தானே!

நன்றி! 

அடுத்த பதிவில் சந்திப்போம்!- அடுத்தப்  பதிவிலும்  வணிக நேரம்
 தொடரும்...!
Saturday, June 14, 2014அனைவருக்கும் நல்  வாழ்த்துக்கள்!


விரைவில் புதிய பதிவில் சந்திப்போம்!GNANAA 

Monday, April 14, 2014

நல் வாழ்த்துக்கள்!


அன்பர்கள் அனைவருக்கும் 

சித்திரை நன்னாள் 

நல் வாழ்த்துக்கள்!

Friday, March 7, 2014

நல்வாழ்த்துக்கள்!

அனைவருக்கும் நல்  வாழ்த்துக்கள்!


விரைவில் புதிய பதிவில் சந்திப்போம்!ஞானா 

Monday, January 13, 2014

தைப்பொங்கல் நன்னாள், நல் வாழ்த்துக்கள்!!

அன்பர் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள்,
தைப்பொங்கல் நன்னாள், நல் வாழ்த்துக்கள்!!