Thursday, May 30, 2013

வணிகத்தை வெற்றிகரமாக முடிப்பது எப்படி ?

இலாபத்தை பதிவு செய்யுங்கள்!  



 நாம் இதுவரை பார்த்ததன் அடிப்படையில் , க்ருட் ஆயிலோ அல்லது காப்பரோ  [ Crude Oil or Copper ] ஒரு பொசிசன் [ ONE LOT ] எடுத்து விட்டோம் என்று வைத்துக்கொள்வோம் ! அதில் இலாபத்தை பதிவு செய்வது எப்படி எனப்பார்ப்போம்.

அன்றைய வணிகத்தில் , அந்த பொருளின் எந்த நிலையில் நாம் வணிகத்தை, துவக்கி இருக்கிறோம் எனப்பார்ப்போம்.

பொருளின் நிலை , அன்றைய வணிகத்தின் உச்ச நிலைக்கு அருகில், அதாவது 1 பாயிண்ட் [ 1000 ருபாய் ] இருந்தால், இரு முறையோ  அல்லது    3 முறையோ , அந்த நிலையை தொட முயற்சித்திருந்தால்,  நிச்சயம் அந்த பொருளின் உச்ச நிலை , சற்றேறக்குறைய, 1 பாயிண்ட் முதல் 2 பாயிண்ட் வரை மாறலாம் , ஆயினும் அதற்கு முன் , 2 பாயிண்ட்கள் வரை நிச்சயம் இறங்கலாம், எனவே , உங்கள் வணிகம் பொருளின் உயர்வின் அருகே , ஒரு 0.9 பாயிண்ட் கீழே இருந்தால் , விலை அந்த பொருளின் உச்ச விலையை தொடும் போதோ , அல்லது, சற்று மேலே ஒரு 0.2 பாயிண்ட் போட்டோ  , அந்த வணிகத்தை , வெற்றி கரமாக இலாபத்துடன் நிறைவு செய்து விடுங்கள். 

இல்லை , மேலும் விலை உயரும் , நிச்சயம் 2 பாயிண்ட் மேலே செல்லும் என உறுதியாக சார்ட்கள் மற்றும் சர்வதேச மார்கெட் விலை நிலவர அடிப்படையில் ,எண்ணும் தன்னம்பிக்கை திலகங்களுக்கு ஒரு வார்த்தை, நீங்கள் எண்ணுவது உண்மையாக நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம், 

ஆயினும் அப்படி நடக்க , விலை 2 பாயிண்ட் வரை நிச்சயம் கீழே இறங்கும் , அப்போது ஸ்டாப் லாஸ் 3 பாயிண்ட் வரை வைக்க வேண்டியது  இருக்கும், அந்த இடைப்பட்ட நேரத்தில் , வேறு ஒரு மார்க்கெட் காரணியால் , விலை அன்றைய கீழ் நிலையை நோக்கி செல்ல ஆரம்பித்தால், உங்களுடைய முடிவு , உங்களை வருத்தும் , 

எனவே , இலாபத்தை பதிவு செய்யுங்கள்!

பிறகு , கவனமாக மார்க்கெட் போக்கை அறியுங்கள்!