Friday, November 1, 2013
Saturday, October 12, 2013
அன்பு வாசகர்கள் , கமோடிட்டி வணிகர்கள்
அனைவருக்கும் எமது உளங்கனிந்த விஜயதசமி ,
சரஸ்வதி பூஜை திருநாள் நல்வாழ்த்துக்கள்!
இந்தப் புனித நன்னாளில் , இயற்கை மூலிகை வழி நின்று தேக ஆரோக்கியம் பெறவும் தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் வாழ்வில் எல்லாவகை செல்வங்களும் பெற்று , கமோடிட்டி வணிகத்தில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற்று நல வாழ்வு வாழ , அன்னை விஜயலட்சுமியை , அன்னை சரஸ்வதியைப் போற்றி , முப்பெரும் தேவியர் பாதம் பணிந்து பிரார்த்திக்கிறோம்!
ஞானகுமாரன்.
Friday, October 4, 2013
இன்ஸ்டன்ட் வணிகம் - இன்ஸ்டன்ட் இலாபம்
வணக்கம் அன்பு கமோடிட்டி வணிக நண்பர்களே!
கால தாமதத்திற்கு வருந்துகிறேன்.இன்றைய பதிவில் எப்படி இன்ஸ்டன்ட் இலாபம் சம்பாதிப்பது எனப் பார்க்கலாம். தயவுசெய்து வணிகத்தில் அனுபவம் கொண்டவர்கள் மட்டுமே இதை, முயன்று பாருங்கள். மற்றவர்கள் எமது ஆரம்ப கட்டுரைகளை வாசித்துவிட்டு , நிறைய பயிற்சிகளுக்குப்பின் வணிகத்தில் இறங்கவும்.
இனி இன்ஸ்டன்ட் வணிகம் பற்றி பார்ப்போம். இது ஓன்றுமில்லை, நாள் முழுவதும் கணினி முன் அமர்ந்து வணிகத்தின் போக்கை உணர்ந்து கொண்டு , வணிகம் செய்யாமல் , சற்றே நேரத்தில் , உடனடி இலாபம் சம்பாதிக்கும் கலை இது.
மிகுந்த முயற்சிகளுக்குப்பின் , அடைந்த பலனை , யாரும் வெளியே சொல்லாமல் தாம் மட்டும் அனுபவிக்கும் சித்த மூலிகை இரசியம் போன்ற இந்த விஷயத்தை, பொதுவில் வைப்பது எமக்கு மகிழ்ச்சியே!
யாம் பெற்ற வெற்றி , யாவரும் பெறட்டும்!
இனி வணிகத்தை, சந்தையை கவனிப்போம். மதியம் 3 மணி அல்லது, இரவு 9 மணி எனககொள்வோம், அதாவது ஐரோப்பிய சந்தைகளும்,அமெரிக்க சந்தைகளும் ஆரம்பித்த சற்று நேரம் கழித்து , சந்தையின் போக்கினை வழக்கமான பொருட்களின் இருப்பு,விலை,ரூபாய் மதிப்பு மற்றும் பிற காரணிகள் கொண்டு மனதில் இருத்திக்கொண்டு , வணிகம் செய்ய விரும்பும் பொருளின் சந்தைபோக்கினை கவனியுங்கள்.
பொருளின் விலை அன்றைய உச்சத்தையோ அல்லது கீழ்நிலையையோ தொடும் அருகில் இருந்தால் , விற்கவோ அல்லது வாங்கவோ செய்யுங்கள். அதாவது , உச்சத்தின் அருகே விற்றுவிடுங்கள் , கீழ் நிலையின் அருகே வாங்கி விடுங்கள் , சற்று நேரத்தில் ,வெகு விரைவில் சிறிய மாற்றத்தில் , கிடைத்த இலாபத்தில் விற்று விடுங்கள் , நிச்சயம் இலாபம் கிடைக்கும், லாட்களின் எண்ணிக்கை கூடும்போது கணிசமான் இலாபம் நிச்சயம்!
மீண்டும் ஒரு முறை எச்சரிக்கிறேன், மிக அனுபவம் கொண்டவர்கள் மட்டும் முயற்சி செய்ய வேண்டிய வணிகம் இது, ஸ்டாப் லாஸ் அவசியம்.ரிஸ்க் அதிகம் இருப்பதால், புதியவர்கள் , ஒரே நாளில் , நிறைய சம்பாதிக்க எண்ணி , ஒரு மாதத்தில் சம்பாதிப்பதை ஒரு நாளில் சம்பாதிக்க நினைத்து , முயன்று இருப்பதை இழக்காதீர்கள்.
இந்த பதிவு அனுபவம் கொண்ட , தேவையான அளவு முதலீடு கொண்ட , வணிகர்களுக்கானது. அவர்களுக்குத்தான் ஏற்கெனவே , தெரியுமே, நீங்கள் என்ன புதிதாக சொல்ல வந்து விட்டீர்கள் என நீங்கள் கேட்கலாம்,
உண்மை என்னவெனில், என்ன தான் நன்றாகப்படித்து விட்டு பரிட்சை எழுதப்போனாலும், சில சமயம் படித்தது மறந்து போகும், அதுவும் மிக நன்றாக படித்தது தெரிந்தது சமயத்தில் ஞாபகத்தில் வராது சிரமப்படுத்தும், அத்தகைய நிலை ஏற்பட விடாமல் அனுபவ வணிகர்களுக்கு அவர்கள் அறிந்த விஷயத்தை மீண்டும் மீண்டும் அவர்கள் படிக்க கேட்க நேரும் பொது , நிச்சயம் மறதி ஏற்படாமல் என்றும் மனதில் இருக்கும் , மேலும் இது உங்களுக்கான , புதியவர்களுக்கான பதிவும் கூட , உங்களை ஊக்கப்படுத்தி , நிறைந்த அனுபவத்திற்கு பிறகு ,எத்தகைய வணிகப்போக்கிலும் வெல்லலாம், குறைந்த நேரத்தில் , இலாபம் ஈட்டலாம் எனும் நற்ச்செய்தியை உங்களுக்கு சொல்லும் பதிவும் கூட இது!
நிறைந்த அனுபவத்தின் மூலம் வணிகத்தில் வெல்ல எமது நல்வாழ்த்துக்கள்!
Monday, September 9, 2013
விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்!
விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்!
வாசக சகோதர சகோதரியர் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்,நண்பர்கள் அனைவருக்கும், விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்!
உங்கள் உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியம் சார்ந்த அனைத்து பிரச்னைகளும் விநாயகர் திருவருளால் முற்றிலும் நீங்கி, நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் உற்றத்தார் மற்றும் சுற்றத்தாருடன் நீண்ட ஆரோக்கியத்துடன் நீடித்த நல்வாழ்வு வாழ, ஞான விநாயகன் திருவடி பணிந்து பிரார்த்திக்கிறோம்!
வாழ்க நலமுடன்!
ஞானா.
Thursday, August 29, 2013
அருமை நண்பர்களே!
மீண்டும் சந்திப்போம்!
தங்களின் மேலான கருத்துக்களை, அன்புடன் வரவேற்கிறோம்!
ஞானக்குமாரன்.
அவரவர் வாழ்வியல் காரணிகளால், கமோடிடி வணிகம் , மூலம் பொருளீட்டி, குடும்ப வாழ்வு மேம்பட அல்லது சம்பளப்பற்றாகுறை காரணமாக பகுதி நேரம் கமோடிடி வணிகம் செய்துகொண்டிருக்கும், உங்களுக்கு, நீங்கள் கமோடிடி வணிகத்தில் வெற்றி பெற்று பொருளாதார தன்னிறைவு அடைய எமது உளப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்!
நீங்கள் முதலீடு செய்துள்ள பணம் , உங்களுக்கு மிக மிகத்தேவையான ஒன்று, இதர வருமானம் கருதி , இங்கே அத்தொகையை முதலீடு செய்திருக்கிறீர்கள், மேலும் , நீங்கள் யாவரும் செய்வது மற்றும் செய்ய விரும்புவது , தின வணிகம் தான், பெருந்தொகையை இன்வெஸ்ட் செய்துவிட்டு, மாதக்கணக்கில் காத்திருந்து, அதில் இலாபம் சம்பாதிக்க மிகப் பணம் படைத்தோர் அதிக அளவில் இருக்கின்றனர்.
ஆயினும் சிறிய தொகையை வணிகத்தில் முதலீடு செய்துவிட்டு,அதன் மூலம் சிறிய அளவில் பொருளீட்டி, வாழ்வியல் தேவைகளை நிறைவேற்ற எண்ணும் அனபர்கள் மூலதனத்தில் அதிக அக்கறை கொள்ளவேண்டும் அல்லவா?
ஆயினும், எந்த நிலை வணிகம் செய்வோர் ஆயினும், அங்கே முகம் தெரியாது, உறவு தெரியாது, நாம் வணிகத்தில் ஈடுபடும்போது, நாம் ஒரு பொருளை வாங்கும் போது அது யாரிடம் இருந்து வாங்கினோம் எனத்தெரியுமா என்ன? மேலும், நாம் அதிக இலாபம் அந்த வணிகத்தில் அடைந்ததும், அவரைக்கூப்பிட்டு , உங்களிடம் வாங்கி நான் நல்ல இலாபம் பெற்றேன் எனக் கூறமுடியுமா என்ன? இல்லை, நஷ்டத்தில் நான் உங்களிடம் வாங்கித் தான் என் முதல் எல்லாம் போயிற்று, எனவே எனக்கு நஷ்ட ஈடு தாருங்கள் எனக் கூறமுடியுமா? வாய்ப்பு இருக்கிறதா?
இதெல்லாம், நீங்கள் அறிந்ததுதான், ஏன் இங்கே, பகிர்கிறோம் என்றால், கமோடிடி வணிகத்தில் முடிவு எடுத்து வணிகத்தில் இறங்குவதில் நாம் தான் இராஜா மந்திரி எல்லாம், ஏன் சமயத்தில் ஏவலாளும் நாம்தான். அதனால், வெற்றி என்பது எப்படி நமது இலக்கோ,இலட்சியமோ அப்படி த்தான் தோல்வி என்பதும் நம்மைத் தொடர்ந்து வரும் ஒரு விசயம் தான். கொஞ்சம் பிசகினால், நம்மை அடையத் தோல்வி காத்திருக்கிறது.
நாம் விலகிச்செல்ல விரும்பும் ஒன்று, நாம் அனுபவிக்க வேண்டாத ஒன்று என நாம் மனதில் நினைக்கும் ஒன்று நம்மை அடைய நாமே, இடம் கொடுத்து விடக்கூடாது!
வெற்றி என்பது ந்மது செயலில் இருக்கிறது! அதில் நமது ஈடுபாட்டில் இருக்கிறது! அர்ப்பணிப்புடன் கூடிய விழிப்புணர்வில் இருக்கிறது!
தவறான செயல்கள் என்றும் நம்மைக் கடைத்தேற்றாது, அதில் நாம் நிச்சயம் வெல்லவும் முடியாது என எல்லா மதங்களின் போதனைகளும் கூறுகின்றன.
அந்த போதனை கமோடிடி வணிகத்திற்கும் பொருந்தும்.இங்கே, தவறான செயல் என்பது என்ன, சந்தைப்போக்கை கவனியாமல் அல்லது அலட்சியப்போக்கில், நான் கணிப்பது நிச்சயம் நடக்கும் என்ற அதீதத் தன்னம்பிக்கையில் வணிகத்தை அணுகுவது,சந்தையில் பொருளின் தற்போதைய நிலை பற்றி அறியாமல், வணிகத்தில் ஈடுபடுவது,மேலும் ஸ்டாப் லாஸ் இல்லாத வணிகம் , எப்படி இலாபத்தில் முடியும் என யோசித்தீர்களா?
யோசித்து செயல்பட்டு , கமோடிடி வணிகத்தில் வெற்றியடையுங்கள்!
ஆரோக்கியமான நல் எண்ணங்களால் உங்கள் வாழ்வை வளமாக்குங்கள்!
தங்களின் மேலான கருத்துக்களை, அன்புடன் வரவேற்கிறோம்!
ஞானக்குமாரன்.
Tuesday, August 27, 2013
கமோடிடியில் வெற்றிகரமாக செயல்பட...
நிறைய பயிற்சிகள் எடுத்துக்கொண்டு , ஃபண்டமெண்டல் , டெக்னிகல் அனாலிஸிஸ் பற்றி தெரிந்துகொண்டோ அல்லது புரிந்துகொண்டோ, வணிகத்தில் இறங்கியாகி விட்டது.
இந்திய கமோடிடி மார்க்கெட் காலை 10 முதல் இரவு 11.30 அல்லது 11.55 வரை இயங்குவது நாமறிவோம். நாம் வணிகத்தில் இறங்கும் நேரம் ஒன்று வணிகம் ஆரம்ப நேரம் அல்லது நமக்கு வசதியான நேரம், நாம் இடைப்பட்ட வணிக நேரத்தில் , வணிகத்தை ஆரம்பிக்க எண்ணும் போது, என்ன செய்வோம்?
நாம் வணிகம் செய்ய விரும்பும் பொருளின் முதல் நாள் முடிவு விலை, இன்றைய ஆரம்ப விலை, இன்றைய உச்சபட்ச விலை, இன்றைய கீழ்நிலை விலை, இவற்றைப்பார்ப்போமா , இல்லையா?
சரி. வேறு என்ன பார்ப்போம்?
சரி. வேறு என்ன பார்ப்போம்?
இன்றைய யு எஸ் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எப்படி இருக்கிறது , எனப்பார்ப்போம் அல்லவா? மேலும், நாம் வணிகம் செய்ய தேர்வு செய்த பொருளுக்கு, உலகலாவிய சந்தையில் அதன் தேவைப்பாடு என்ன, அதன் மொத்த இருப்பு, இப்போது அதன் ஆர்டர் தேவை அளவு என்ன? மேலும் இன்றைக்கு என்ன என்ன யு எஸ் வாராந்திர பொருளாதார அறிக்கைகள் வர இருக்கின்றன, என பார்ப்போமா, இல்லையா?
சரி, இவற்றை எல்லாம், நம்முடைய அளவில் நாம் அவதானித்துவிட்டோம், பிறகு என்ன ? வணிகத்தில் இறங்க வேண்டியது தானே? என்ன யோசனை ?
எல்லாம் ஓரளவு நாம் யூகித்தாலும், இடைநிலை அதாவது , நாம் இப்போது வணிகத்தில் இறங்க எண்ணும் நேரத்தில் , அந்த பொருளின் வணிக நிலையை கவனிக்கும்போது, ஒரு சிறிய யோசனை வருகிறதே, நம்முடைய முடிவு அப்பொருளை வாங்குவதா அல்லது விற்பதா எதை செய்வது என்று?
இந்த ஒரு விசயத்தைத்தான் , நாம் இப்போது பார்க்கப்போகிறோம், அதற்காகத்தான் இந்த சற்றே நீளமான ஒரு முன்னோட்டம்.
சரி , எப்படி வணிக இடைநேரத்தில் வணிகத்தை ஆரம்பிப்பது?
நம்மில் நிறைய பேருக்கு இப்போது ஆற்றில் குளிக்கும் வாய்ப்பு இல்லாவிடினும், பள்ளிபருவத்தில் அல்லது கல்லூரிப்பருவத்தில் இருந்திருக்கும், அந்த முதல் குளியல் அல்லது நீச்சல் அனுபவத்தை சற்றே எண்ணிப்பாருங்கள், யாராவது ஒரு நண்பர் நிச்சயம் அவருக்கு நீச்சல் தெரிந்திருக்கும் [ :) ], அவர்தான் நமக்கு தைரியம் சொல்லி, நமக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பார்,அவருக்குத்தெரிந்த அல்லது அவர் அறிந்த நீச்சல் தொடர்பான சில விசயங்களை உங்களுக்கு சொல்லிக்கொடுத்திருப்பார், அதில், அவர் சொல்லிக்கொடுத்ததில் தலையாயது என்ன என்று இப்போது யோசிக்க முடிகிறதா? யோசியுங்கள், கொஞ்ச நேரம்!
என்ன ஞாபகம் வரவில்லையா? எதிர்நீச்சல் பற்றி உங்கள் நீச்சல் பயிற்சிக்காலங்களில் நண்பர் என்ன சொன்னார்? அல்லது சொல்லியிருப்பார்?
ஆரம்ப காலம் அல்லது எப்போதும், எதிர்நீச்சல் மிக மிக கவனமான அல்லது ஆபத்துக்காலங்களில் மட்டும் செய்ய வேண்டிய ஒன்று என ச்சொன்னாரா, இல்லையா? இப்போது ஞாபகம் வந்துவிட்டதா? நல்லது, அதுதான் இங்கே நமக்கும் அவசியம் தேவைப்படும், என்றும் மனதில் பசுமையாக பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டிய ஒன்று!
ஏன் என்கிறீர்களா? எல்லாம் நமது கமோடிடி வணிகம் செவ்வனே செய்யத்தான்!
எப்படி ஆற்றில் நீர் வரத்திற்கு எதிராக நீந்தக்கூடாதோ, அப்படிதான் கமோடிடி மார்க்கெட் போக்கிற்கு எதிராக அப்போது செயல்படக்கூடாது!
நீங்கள் பல்வேறு தகவல்களை திரட்டிக்கொண்டு, ஒரு முடிவு எடுத்து வணிகம் செய்ய வரும்போது, இங்கே மார்க்கெட் கூலாக, உங்கள் எண்ணத்திற்கு நேர்மாறாக சென்றுகொண்டிருக்கும், ஏன் எப்படி என யோசிக்காமல் ,உங்கள் முடிவுப்படி எதிர்நீச்சல் போட்டு கண் முன்னே கிடைக்கும் கமோடிடி வணிக இலாப வாய்ப்பினை இழந்து நஷ்டமடைவீர்களா? அல்லது மார்க்கெட் போக்கில் சென்று இலாபம் அடைவீர்களா?
முடிவு உங்கள் கையில்!
சிந்தியுங்கள்! செயல்படுங்கள்! வெல்லுங்கள்!!
Subscribe to:
Posts (Atom)





